'அடுத்தடுத்த புரோமோஷன்கள்.. சம்பள உயர்வை' அறிவித்து மாஸ் காட்டும் 'தாராள' ஐடி நிறுவனம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அக்டோபர் 1, 2020 முதல் காக்னிசண்ட் ஊழியர்களுக்கான பதவி உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூத்த ஊழியர்களுக்கான பதவி உயர்வு ஜனவரி-மார்ச் 2021-ஆம் காலாண்டில் அறிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கான மின்னஞ்சலில், காக்னிசண்டின் தலைமை மக்கள் அதிகாரி பெக்கி ஸ்க்மித், “அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் அசோசியேட் மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரோகிராமர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்குகிறோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இதேபோல் சீனியர் அசோசியேட்டிற்கான பதவி உயர்வு 2021 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும். இது பதவி உயர்வு பெற்ற அவர்களின் மேலாளர்களால் அறிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பதவி உயர்வுகள் தகுதி அடிப்படையிலானவை என்பதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போனஸ் 2019 ஐ விட அதிகமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஆகஸ்ட் மாதத்தில், அனைத்து மட்டங்களுக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்காக பதவி உயர்வுகள் ஒரே சுழற்சியில் அமல்படுத்தப்படும் என்றும் தொடர்ச்சியான உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு அதற்கேற்ப வெகுமதி வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் சுமார் 2.8 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரசிகர்களுக்கு குட் நியூஸ்’... ‘இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண’... ‘ஆனா, ஒரு கண்டிஷன்’... ‘வெளியான அறிவிப்பு’...!!!
- ‘வாழ்த்துக்கள் நட்டு’...!!! 'உங்கள அங்க மீட் பண்றேன்’...!!! 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...!!!’
- ‘அடித்தது யோகம்!’.. இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த பிரபல இந்திய ஐடி நிறுவனம்!.. ‘குஷியில்’ 80% ஊழியர்கள்!
- 'இனி நிரந்தரமாவே Work From Home தானா?!!'... 'புதிய தளர்வுகளால்'... 'IT, BPO ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'...
- ‘நீங்க சொல்றது நம்புற மாதிரியே இல்லயே’... ‘உங்களுக்கு தெரியாம எப்படி நடந்துச்சு???’... கேள்விகளால் துளைத்து எடுக்கும் சேவாக்...!!! மாட்டிக் கொண்ட ரவி சாஸ்திரி...!!!
- இதுக்கு ஒரு ‘எண்டே’ இல்லையா..! இந்தியாவில் இருந்து ‘சீனாவுக்கு’ பறந்த விமானம்.. கடைசியில் பயணிகளுக்கு ‘காத்திருந்த’ அதிர்ச்சி..!
- ‘அந்த மனசுதான்’...!!! ‘இவ்ளோ உயரத்துக்கு கொண்டு போயிருக்கு’... ‘தனி ஒருவராக இந்திய மனிதரின் சாதனைக்கு!!’... 'அமெரிக்காவில் கிடைத்த வெகுமதி’!!!
- 'இனி H-1B விசா தேர்விற்கு புதிய Rule???'... 'திடீர் பரிந்துரையால்'... 'இந்தியர்களுக்கு எழுந்துள்ள அடுத்த பெரும் சிக்கல்!!!'...
- “ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்!”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு!.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்!
- “இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!