"போப் பிரான்சிஸ் ஒரு முத்தம் கிடைக்குமா?..." வம்புக்கிழுத்த 'கன்னியாஸ்த்திரி'... போப் என்ன செய்தார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தன்னிடம் முத்தம் கேட்ட கன்னியாஸ்திரியிடம் போப் பிரான்சிஸ் அளித்த பதில் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை உருவாக்கியது.

சமீபத்தில் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த போது பெண் ஒருவர் அவர் கையை பிடித்து வேகமாக இழுத்தார். இதனால் பொறுமை இழந்த போப் அவரது கையை வேகமாக தட்டிவிட்டு கோபத்துடன் சென்றார்.

அதன்பின் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த போப் கோபமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டார். தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த முறை போப் கோபப்படாமல் சாதுர்யமாக நடந்து கொண்டார்.

இத்தாலியின் ரோம் நகரில் வாரம் தோறும் தன்னை பார்க்க வருபவர்களை போப் சந்திப்பது வழக்கம். அவ்வாறு பார்வையாளர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் 'போப் ஒரு முத்தம் கிடைக்குமா?' என கேட்டுள்ளார்.

அதற்கு போப் நீ கடித்து விடுவாய் என்று வேடிக்கையாக பதில் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டனர். இதன்பின் சரி நான் உனக்கு முத்தம் தருகிறேன் ஆனால் கடிக்க கூடாது எனக் குறிப்பிட்டார். கன்னியாஸ்திரி உறுதியளித்தை அடுத்து அவரது இடது கன்னத்தில் போப் முத்தமிட்டார். இதனால் உற்சாகமடைந்த அந்த கன்னியாஸ்திரி துள்ளி குதித்தார்.

POPE FRANCIS, KISSES NUN, CHECKING, BITE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்