வந்து விட்டது ‘ரிமோட்’ வெண்டிலேட்டர்... 'போலந்து' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு...' 'விலையும் குறைவு...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா நோயாளிகளுக்கு ‘ரிமோட்’ வெண்டிலேட்டரை கண்டுபிடித்து போலந்து விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துத்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் பி.பி.இ. என்று சொல்லப்படுகிற சுய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு அவர்கள் பணியாற்றினாலும்கூட கொரோனா வைரஸ் அவர்களை 100 சதவீதம் தொற்றாது என்பதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை.
கொரோனா நோயாளிகளுக்கு முன்நின்று சிகிச்சை அளித்து வந்த பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற மருத்துவர்களுக்கு ஒரு அற்புதமான சாதனத்தை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
அதுதான் ‘ரிமோட் வெண்டிலேட்டர்’. எங்கோ தொலைவில் இருந்து கொண்டு இதை மருத்துவர்களால் இயக்க முடியும். ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெறுகிற கொரோனா நோயாளியின் அருகில் செல்லாமல் அவர்களை இயல்பாக சுவாசிக்க வைக்க மருத்துவர்களுக்கு இது அற்புதமான வரம் என்றே சொல்ல முடியும்.
இந்த ரிமோட் வெண்டிலேட்டரின் செயல்பாடுகளை மருத்துவமனையின் எந்த மூலையில் இருந்து கொண்டும் மருத்துவர்களால் மாற்ற முடியும்.
வெண்டிலேட்டர்கள் துண்டிக்கப்பட்டுவிட்டாலோ, நோயாளியின் நிலையில் அதிரடியாக ஒரு மாற்றம் ஏற்பட்டாலோ அது மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டு விடும்.
இந்த ரிமோட் வெண்டிலேட்டருக்கு பெயர், ‘ரெஸ்பிசேவ்’ என்பதாகும். இது எப்படி நோயாளிகளின் சுவாசத்தை காப்பாற்றுகிறதோ, அதே போல மருத்துவ பணியாளர்களையும் தொற்றில் இருந்து காக்கும். இதை லெஸ்செக் கோவலிக் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளது.
இந்த ரெஸ்பிசேவ், ஒரு வழக்கமான வெண்டிலேட்டரை விட குறைவான விலையில் கிடைக்கிறது. இதன் தொழில்நுட்பம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் இது போலந்தில் நோயாளிகள் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும். அதன்பின்னர் அது உலகளாவிய சந்தைக்கு வரும் என்கிறார்கள், அதன் வடிவமைப்பாளர்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இங்க' வர்றவங்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய மாட்டோம்... பட் ஒரு கண்டிஷன்... 'துணிச்சல்' அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்!
- திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உட்பட 19 பேர் பலி!.. ஒரே நாளில் 1,927 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- சென்னையை அலறவிடும் கொரோனா... களத்தில் பீலா ராஜேஷ் அதிரடி!.. பக்கா ப்ளானோட வந்திருக்காங்க!
- 'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க?...'
- சலூன் கடை 'ஓனருக்கு' கொரோனா... எப்படி வந்தது? யார் மூலம் பரவியது?... கடைக்கு வந்தவர்களை 'கண்காணிக்கும்' அதிகாரிகள்!
- 'அடினா அடி, இவங்களுக்கு தான் பேரடி'... '84.3 பில்லியன் டாலர்கள் பேரிழப்பு'... எப்படி தாங்கி கொள்ள போறாங்க?
- உடலுறவின் போது மாஸ்க் அணிவது நல்லது!.. உயிர் அணுக்களின் மூலம் கொரோனா பரவுமா?.. Singles-க்கும் தீர்வு உண்டு... கவலைப் படாதீங்க!
- 'கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டோமே'... 'கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா'... 'கதறிய பெற்றோர்'... விபரீதத்தில் முடிந்த இளம் ஜோடியின் காதல்!
- 'செலவைக்' குறைக்க அதிரடி முடிவு... 10,000 ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்!
- 1665 இந்தியர்கள் உட்பட... 2000 ஊழியர்களை 'மொத்தமாக'... 'திருப்பி' அனுப்பிய நாடு!