"40 வருஷத்துக்கு அப்புறம் இப்போ தான்.." லண்டன் கழிவு நீரில் இருந்த தொற்று.. அதிர்ச்சியை உண்டு பண்ணிய ஆய்வு முடிவு
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2020 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று, மக்கள் அனைவரையும் கடுமையாக பாதிப்புக்குள் ஆக்கி இருந்தது.
தற்போது பல நாடுகளில், கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், லண்டனில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, போலியோ தொற்று அறிகுறிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கழிவு நீரில் நடத்திய ஆய்வு
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை, லண்டன் கழிவு நீர் மாதிரிகளில், நிபுணர்கள் வீரியம் மிகுந்த போலியோ தொற்று இருப்பதை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அதே போல, சமூக பரவலின் அறிகுறியாக மாறலாம் என்றும் சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கப்படடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே வேளையில், பிரிட்டனில் உள்ள அனைவரும் சிறு வயதிலேயே போலியோவுக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால், அதிக பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிட்டனில் இதுவரை யாரும் போலியோ மூலம் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
நிலவரம் என்ன?
அதே போல, லண்டனின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் போலியோ தொற்றின் மாதிரிகள், கண்டறியப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், போலியோ தடுப்பூசி செலுத்தாத நபர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், விரைவில் நாடு முழுவதும் போலியோ தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட வாய்ப்பு உருவாகலாம் என்றும் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.
கடைசியாக, கடந்த 1984 ஆம் ஆண்டு, போலியோ நோயால் பிரிட்டன் மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 2003-இல் போலியோ இல்லாத நாடாகவும், பிரிட்டன் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது கழிவு நீரில் போலியோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
போலியோ தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை பெரிய அளவில் தாக்காது என தகவல் தெரிவிக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘லண்டன் பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்’.. தமிழ் முறைப்படி தாலி கட்டி கல்யாணம்.. குவியும் வாழ்த்து..!
- "இனி பணத்துல சம்பளம் கொடுக்கமாட்டேன். இனிமே அதுதான் பெஸ்ட் வழி"..CEO போட்ட புது ஆர்டர்.. திகைத்துப்போன ஊழியர்கள்..!
- அடேங்கப்பா..! 400 வருசத்துக்கு அப்புறம் லண்டனுக்கு கொண்டுவரப்பட்ட 2 நீர்நாய்கள்.. இதுக்கு பின்னடி இப்படியொரு காரணம் இருக்கா..?
- அந்த ஏரியாவே அதிருற மாதிரி.. வீட்டுக்குள்ள இருந்து கேட்ட பெண்ணின் அலறல்.. கதவ உடைச்சு உள்ள நுழைஞ்சப்போ.. ஷாக் ஆன போலீசார்
- நடுவானில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. விமானத்துல எல்லாரும் தூங்கிட்டு இருந்த நேரம் பார்த்து.. பயணி செய்த காரியம்
- நான் ஐபோன் தான் ஆர்டர் பண்ணினேன்.. ஆனா வந்தது அது இல்ல.. வந்த பொருளை நினைத்து 7 நாளா மன வருத்தத்தில் இருக்கும் பெண்
- எப்பவுமே இதே Dish-ஆ ஆல் ஓவர் Wifesம் இந்த விஷயத்துல ஒரே ட்ரிக்ஸ் தான் Use பன்றாங்க போல.. புலம்பும் ஃபுட் பால் வீரர்
- 'தப்பு தான்.. என்ன மன்னிச்சிடுங்க..' நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்.. ஏன் தெரியுமா?
- சிகிச்சைக்கு காசு தரமுடியவில்லை.. லண்டனில் ஆஸ்பத்திரியில் இருந்து பாதியில் வெளியேறிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்
- மிஸ்டர் விஜய் மல்லையா இனிமேல் அந்த பங்களால நீங்க இருக்க முடியாது! குடும்பத்தோட வெளியேறிடுங்க.. லண்டன் நீதிமன்றம் அதிரடி