"கறுப்பினத்தவர் மரணத்துக்காக மண்டியிட்டது அருவருப்பானது!.. வெட்கப்படுகிறேன், அவமானப்படுகிறேன்!" - மன்னிப்பு கேட்டு அதிரவைத்த போலீஸ்காரர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கறுப்பின் ஆதரவுப் போராட்டத்தில் மண்டியிட்டதற்காக தனது சக போலீஸ் அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நியூ யார்க் நகர போலீஸான லெப்டினன் ராபர்ட் கட்டானி.

Advertising
Advertising

நியூயார்க் நகர போலீஸான லெப்டினன் ராபர்ட் கட்டானி, லோயர் மன்ஹட்டனில் உள்ள ஃபோலி சதுக்கத்தில் தானும் தனது சக அதிகாரிகளும் போராட்டக்காரர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் முன் மண்டியிடாமல் இருந்திருந்தால் போராட்டம் வன்முறையாக மாறும் என்பதால், மண்டியிட்டதாகவும், இதற்காக தன் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவதாகவும், அவமானப்படுவதாகவுன், வெட்கப்படுவதாகவும் சக அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தவறான முடிவைத்தான் எடுத்ததாகவும், இருப்பினும் அவ்வாறு நடந்துகொண்டிருக்காவிட்டால், போராட்டக் காரர்கள் என்ன செய்திருப்பார்கள் என்றே தெரியாது என்றும் சக அதிகாரிகளுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் குறிப்பிட்ட அவர், அதேசமயம், “மற்ற அதிகாரிகளின் தவறை ஒப்புக்கொள்ள முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்