'இதெல்லாம் கிளி பாக்குற வேலயா?'.. கடத்தல்காரர்களை அலெர்ட் செய்த கிளி மீது கடுப்பான போலீஸார்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரேசில் நாட்டில் போதைப்பொருள் மற்றும் கடத்தல் தொழில் அதிகமாகி வருவதால் இதைத் தடுக்க பிரேசில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், போதைப்பொருள் பதுக்கி வைத்திருக்கும் குடோன் குறித்த ரகசிய தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் அங்கு  காவல்துறையினர் அதிரடியாக நுழைந்தனர். அப்போது காவல்துறையினர் வருகை குறித்து அங்கிருந்த கிளி  ஒன்று கடத்தல்காரர்களுக்கு சத்தமாக குரல் எழுப்பி எச்சரிக்கை செய்துள்ளது.

"Mum, the police!" என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கை செய்த அந்த கிளிக்கு கடத்தல்காரர்கள் இதற்காகவே பயிற்சி அளித்து வளர்த்து வந்தது  காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்தக் கிளியை பிடித்து சென்றனர். பின்னர் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த கிளிக்கு அருகில் பல அதிகாரிகள் சென்ற போதும் அந்தக் கிளி ஒரு சத்தம் கூட எழுப்பவில்லை என்பதுதான் இதில் ஆச்சரியமூட்டும் விஷயம்.

இதையடுத்து, அந்தக் கிளியை காவல் துறையினர் உள்ளூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் ஒப்படைத்துவிட்டனர். இந்நிலையில், இந்த மிருகக்காட்சி சாலையில் அந்த கிளிக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இறக்கை விரித்து பறப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அந்தக் கிளி பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

BRAZIL, PARROT SEIZED, SMUGGLERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்