ஏடிஎம்-ஐ தகர்த்த 11 பேர் சுட்டுக்கொலை.. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து கொள்ளையடிக்க முயற்சித்த 11 பேரை பிரேசிலின் சாவோ பாலோ மாநில அரசின் ஆயுதப்படை காவலர் பிரிவினர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம்-ஐ தகர்த்த 11 பேர் சுட்டுக்கொலை.. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பரபரப்பு சம்பவம்!

பிரேசிலின் கிழக்கு நகரமான கவுரேரெமா நகரின் இரண்டு வங்கிகளுக்குட்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தகர்த்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது. அப்போது உடனடி எமர்ஜென்சியால் அலர்ட்டால் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, அங்கிருந்து தப்பியோடியவர்களில் 11 பேரை ராணுவத்தினர் சுடத் தொடங்கினர்.

தப்பியோடியவர்களில் இன்னும் சிலர் நகரில் ஆங்காங்கே இருந்த வீடுகளுக்குள் புகுந்து குடியிருப்புவாசிகளை பணயக் கைதிகளாக பிடித்துக்கொண்டு போலீஸாரையும் குடியிருப்புவாசிகளையு மிரட்டினர். அவர்களையும் தாக்கி போலீஸார் பொதுமக்களை மீட்டுள்ளனர். மொத்தமாக 25 பேருக்கும் மேற்பட்டோரால் கொள்ளையடிக்க திட்டம் போடப்பட்டதும், இவர்களின் பெரிய துப்பாக்கிகள், பிஸ்டல்கள், வெடிகுண்டுகள், குண்டு துளைக்காத ஆடைகள் உள்ளிட்டற்றை பறிமுதல் செய்ததோடு சிலரை போலீஸார் கைதும் செய்தனர்.

காவல் நிலையம் அருகே உள்ள தெருக்களில் இருந்த வங்கிகளின் ஏடிஎம்மில் பட்ட பகலில் கைவைத்த இந்த கொள்ளையார்களின் துணிச்சல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், உடனே காவல்துறையினரும் மாநிலத்தின் அரசின் ஆயுதப்படை காவல் பிரிவினர் சம்பவ இடத்திலேயே வைத்து 11 திருடர்களை சுட்டுக் கொன்றதால் பாதுகாப்பாக உணர்வதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

BIZARRE, ROBBERY, ATM, BRAZIL, GUNSHOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்