அமெரிக்காவில் தொடரும் துயரம்: மகள் 'பிறந்த' நாளுக்கு முன்... போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட வாலிபர்... வெடித்தது போராட்டம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விசாரணைக்கு வர மறுத்ததால் போலீசார் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இதையடுத்து மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

கடந்த மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீசாரின் வன்முறைக்கு பலியானார். இதையடுத்து அந்நாட்டில் மிகப்பெரும் போராட்டம் வெடித்தது. கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் போலீசார் திணறினர். ஜார்ஜின் இறுதி ஊர்வலம் முடிந்த பின்னர் தான் இந்த போராட்டங்கள் சிறிது,சிறிதாக கட்டுக்குள் வந்தன.

இந்த நிலையில் அதேபோன்ற மீண்டும் ஒரு கொலை நடந்துள்ளது. கருப்பின வாலிபர் ஒருவர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி இருக்கிறார். அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்து இருக்கிறார் என நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.  இதனால் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் ரேஷார்ட் புரூக்ஸ்(27) என்ற வாலிபரை விசாரணைக்கு அழைத்து உள்ளனர்.

ஆனால் அவர் வர மறுத்ததுடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார்.  இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டார்.  இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் அந்த உணவகத்தை தீ வைத்து கொளுத்த, தீயணைப்பு துறையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய  போலீஸ் அதிகாரி காரேல்ட் ரோல்ப் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறை உயரதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் தன்னுடைய பணியை ராஜினாமா செய்துள்ளார். கொல்லப்பட்ட ரேஷார்ட்டின் இளைய மகளுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்