'100 பெண்களை ஆபாசப்படம் எடுத்த நபர்...' 'பாத்ரூம், ட்ரெஸிங் ரூம்ன்னு ஒரு இடம் விடல...'கடைசியில இப்படி தான் மாட்டிருக்கார்...' 13 வருசமா இது தான் வேலை...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுமார் 13 ஆண்டுகளாக ரகசிய கேமராக்கள் மற்றும் செல்போன் பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக வீடியோ எடுத்த 35 வயதான ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'100 பெண்களை ஆபாசப்படம் எடுத்த நபர்...' 'பாத்ரூம், ட்ரெஸிங் ரூம்ன்னு ஒரு இடம் விடல...'கடைசியில இப்படி தான் மாட்டிருக்கார்...' 13 வருசமா இது தான் வேலை...!
Advertising
Advertising

சிங்கப்பூரை சேர்ந்த 35 வயதான ஒருவர்  2003 ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களையும் சிறு வயது குழந்தைகளையும் சட்ட விரோதமாக ஆபாசமாகப் படம் பிடித்த குற்றவாளியைச் சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குளியலறை, கழிவறை, பெண்கள் உடை மாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்களை வைத்து பல ஆபாச வீடியோக்களை ரகசியமாக எடுத்துள்ளார். இதுவரை அவரிடமிருந்து சுமார் 1400-ற்றிற்கும் மேற்பட்ட வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர் பேருந்துகளில் செல்வோர், ரயில் நிலையங்கள் பொது இடங்களில் இருக்கும் பெண்களையும், குறுகிய ஆடைகளை அணியும் பெண்களைக் குறி வைத்து வீடியோ எடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு அந்த நபர் தன்னுடன் பணிபுரிந்த பெண் ஊழியரை ரகசியமாக வீடியோ எடுக்கும் போது அந்த பெண் அதை பார்த்து போலீஸில் புகார் அளித்துள்ளார். அவ்வாறு தான் இவரின் இந்த ரகசிய நடவடிக்கை வெளியே வந்தது. உண்மையை ஒப்புக்கொண்ட அவருக்கு சிங்கப்பூர் அரசு 2 வருடம் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்