"கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்".. துருக்கியை புரட்டிப்போட்ட பூகம்பம்.. கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்த உருக்கமான கவிதை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் அடுத்தடுத்து நேர்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாடே ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

                   Images are subject to © copyright to their respective owners.

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, வீரர்கள் பாடுபட்டு வந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

ஆனால், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலைய செய்தது. இந்த நடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான  சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவிலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளன.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த பதிவில் துருக்கியின் தற்போதைய நிலை குறித்து உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ள வைரமுத்து உலக நாடுகள் துருக்கிக்கு உதவ வேண்டும் எனவும் தனது கவிதையின் மூலமாக கோரிக்கை வைத்திருக்கிறார்.

 

VAIRAMUTHU, TURKEY, EARTHQUAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்