இன்னும் ‘ரிசல்ட்டே’ வரல.. அதுக்குள்ள அதிபரா?.. வாழ்த்துச் சொல்லி வசமாக ‘சிக்கிய’ டிரம்ப் மனைவியோட நாட்டு பிரதமர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்னரே டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் ஒருவர் சிக்கலில் மாட்டியுள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்றிலிருந்து வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன்றன. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 தொகுதிகளையும், டிரம்ப் 214 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஒரு சில மாகாணங்களில் கடுமையான இழுபறி நீடித்து வருகிறது. அதனால் அடுத்த அதிபர் யாரென மக்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்னரே அதிபர் டிரம்புக்கும், துணை அதிபர் மைக் பென்ஸுக்கும், ஸ்லோவேனியா நாட்டு பிரதமர் ஜேன்ஸ் ஜனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘அமெரிக்க மக்கள் அதிபர் டிரம்பை மீண்டும் அதிபராக தேர்தெடுப்பது உறுதியாகியுள்ளது. அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸுக்கு எனது வாழ்த்துக்கள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலினா, ஸ்லொவேனியா நாட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்