'தப்பு தான்.. என்ன மன்னிச்சிடுங்க..' நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்.. ஏன் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன்: கொரோனா காலத்தின் போது தனது இல்லத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்காக போரிஸ் ஜோன்சன் மன்னிப்பு கோரினார்.

Advertising
>
Advertising

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை உண்டாக்கிய கொரோனாவுக்கு பிரிட்டனும் ஆளானது. லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் அவதிக்குள்ளாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அந்நாட்டு அரசு அமல்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாளையொட்டி பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக லண்டன் போலீசார் அண்மையில் போரிஸ் ஜான்சனிடம் விசாரணையை தொடங்கினர். இந்தச் செய்தியால் போரிஸ் ஜான்சன், அவரின் கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளார்.

அதுதொடா்பான அறிக்கை முழுமையாக வெளியிடப்படாதபோதிலும், முக்கிய தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில் ஊரடங்கு அமலில் இருந்தபோது பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இது பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியினர்  பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், "பிரதமர் மக்களுக்கு துரோகம் செய்து, பல மாதங்களாக மூடிமறைத்து தன்னைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களும் இதனால் அவர்மீது கோபம் கொண்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஊரடங்கின்போது விதிமுறையை மீறி பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்காக போரிஸ் ஜான்சான் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். அவர் கூறியதாவது,'மன்னிக்கவும். மக்களின் கோபம் எனக்குப் புரிகிறது. நாம் கண்ணாடியில் நம்மை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். அதே சமயம் இதை சரிசெய்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றார்.

BORIS JHONSON, PRIME MINISTER, ABOLOGIS, UK, DRINKING PARTY, PM HOUSEE, BIRTHDAY PARTY, LONDON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்