அந்த கார்ல லிஃப்ட் கேட்டு பாப்போம்.. ஐயோ மேடம் நீங்களா? எவ்ளோ பெரிய ஆளு நீங்க.. காரில் ஏறியவுடன் துள்ளி குதித்த பெண்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்ற மினி கூப்பர் கார் ஒன்றில் லிஃப்ட் கேட்ட இரண்டு பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி தரக்கூடிய அளவிற்கு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Advertising
>
Advertising

லிஃப்ட் கேட்ட பெண்கள்:

சுவிட்சர்லாந்தில், இரன்டு பெண்கள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கையில்., அப்போது அவ்வழியே மினி கூப்பர் கார் ஒன்று வந்துள்ளது. சரி எதற்கு நடந்து போகிறோம் என எண்ணி இருவரும் அந்த காரை நோக்கி லிஃப்ட் கேட்டுள்ளனர். அந்த காரும் உடனடியாக நிறுத்தப்பட்டது, இதை அவர்கள் முதலில் எதிர்பார்க்கவில்லை. நிறுத்தியவுடன் அவர்களும் உள்ளே ஏறினார். உள்ளே சென்று இருவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

உள்ளே காத்திருந்த அதிர்ச்சி:

அது என்னவென்றால், அந்த காரை ஒட்டிக்கொண்டு வந்தது சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு துறைகளின் அமைச்சர் சிமோனெட்டா சொம்மாருகா. பொதுவாக இவர் மாதிரியான தலைவர்கள் உதவி செய்யாமல் தனது பாதுகாப்பு தான் முக்கியம் என காரை நிறுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவர் மிகவும் மனிதாபிமானம் உள்ளவராக இருவரையும் அழைத்துச்சென்று அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டுள்ளார்.

உதவிக்கு நன்றி:

இந்த சம்பவம் பெர்ன் என்ற பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பாக நடந்துள்ளது. இது குறித்து எந்த தகவலும் முதலில் வெளிவரவில்லை. ஆனால், அமைச்சரின் பெருந்தன்மையான உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் இருவரும் அவருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர்.

எத்தனை அமைதியான நாடு எங்களிடம் இருக்கிறது:

அந்த கடிதத்தில், "எத்தனை அமைதியான நாடு எங்களிடம் இருக்கிறது, ஒரு நாட்டின் மிகப்பெரிய அமைச்சர் சாதாரண ஹிட்ச்ஹைக்கர்களை காரில் அழைத்துச் செல்கிறார்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து, சிமோனெட்டா சொம்மாருகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் சிமோனெட்டா ஒரு தகவலை எழுதியிருந்தார். அவர் அந்த பெண்களைப் பார்த்த தருணம் தான் மினி கூப்பரில் சாலையில் சென்று கொண்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் வயதானவர் என்றும், இருவரும் பனிக்கட்டி உறைந்த சாலையில் நடந்து செல்வதைக் கண்டு உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களோடு மக்களாக:

இந்த இன்ஸ்டா பதிவை கண்ட பொதுமக்கள் மந்திரி சிமோனெட்டாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சுவிட்சர்லாந்தின் ஏழு பேர் கொண்ட அமைச்சரவை உறுப்பினர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பொது இடங்களில் செல்வது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக புழங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LIFT, CAR, SWITZERLAND, சுவிட்சர்லாந்து, கார், அமைச்சர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்