'டாய்லெட் ஏன் ரொம்ப நேரமா பூட்டி இருக்கு'?.. 'அய்யோ... யாராவது கதவ திறங்களேன்'!.. நடுவானில் பயணி செய்த நடுங்கவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரியா வழியாக சைப்ரஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, கழிவறையை பயன்படுத்திய பயணியால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை சைப்ரஸ் நாட்டில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானம் ஆஸ்திரியாவின் Graz விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, எதற்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. அதாவது, விமானத்தில் பயணித்த 51 வயதான ரஷ்ய பயணி, கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டதே காரணமாக கூறப்படுகிறது.

விமானம் புறப்பட்டதில் இருந்தே அவர் கழிவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டதாகவும், இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் விமானத்தை Graz விமான நிலையத்தில் தரையிறக்கியதாகவும் விமானி தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, விமானியின் கோரிக்கையை ஏற்று, ஆஸ்திரியா போலிசார் அந்த பயணியை காவல் நிலையம் அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், விமானத்தின் கழிவறையையும் முழுமையாக சோதனை செய்தனர்.

ஆனால், அச்சப்படும் வகையில் ஏதும் கண்டறியப்படவில்லை எனவும், போலிஸ் விசாரணைக்கு அந்த ரஷ்யர் முழுமையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், கழிவறைக்கு சென்று பூட்டிக்கொண்டதன் காரணத்தை அந்த நபர் வெளியிடவே இல்லை எனக் கூறப்படுகிறது. அதையடுத்து, விமானம் புறப்பட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதுடன், அந்த நபரை ரயிலில் அனுப்பி வைத்துள்ளதாக ஆஸ்திரியா போலிசார் தெரிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்