VIDEO: ‘ஜஸ்ட் மிஸ்’.. தரையிறங்கும் போது கவிழப் பார்த்த விமானம்.. சட்டென பைலட் எடுத்த அந்த முடிவு.. பரபரப்பு காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விமானம் ஒன்று தரை இறங்கிய போது பலமான காற்று வீசியதால் நிலைதடுமாறிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஸ்காட்லாந்து நாட்டின் அபெர்டீன் (Aberdeen) விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தில் நேற்று காலை பிரிட்டிஷ் (British Airways) பயணிகள் விமானம் வந்துள்ளது. விமானம் தரை இறங்கும் நேரத்தில் பலமான காற்று வீசுயுள்ளது. இதனால் வேகமாக விமானத்தை தரையிறக்க விமானி முயன்றுள்ளார்.

அப்போது விமானம் தரையில் இறங்கும் ரன்வேவுக்கு அருகே காற்று வேகமாக வீசியதால், விமானம் அங்கும் இங்கும் தடுமாறியது. ஒரு கட்டத்தில் விமானத்தை ரன்வேயில் தரையிறக்கியபோது, காற்று பலமாக வீசவே விமானம் ஒருபக்கமாக கவிழச் சென்றது.

இதனால் விமானத்தை மீண்டும் விமானி மேலே இயக்கினார். இதனை அடுத்து இரண்டாவது முறையாக விமானத்தை தரையிறக்க முயன்றபோதும் காற்று பலமாக வீசியது. ஆனாலும் சாதூர்யமாக செயல்பட்டு விமனி பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார். இதனை BIG JET TV என்ற ஊடகம் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளது.

 

இதுகுறித்து தெரிவித்துள்ள விமான நிர்வாகம், ‘இதுபோன்ற மோசமான வானிலைகளில் சாதூர்யமாக செயல்பட எங்களது விமானிகள் நன்கு பயிற்சி பெற்றுள்ளனர். எங்கள் விமான குழுவினர் பத்திரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளனர். பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை’ என தெரிவித்துள்ளது.

 

HEATHROW, PLANE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்