22 பயணிகளுடன் காணாமப்போன விமானம்.. பைலட்டின் போனிலிருந்து வந்த சிக்னல்..சம்பவ இடத்துக்கு போன அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நேபாளத்தைச் சேர்ந்த சிறிய ரக விமானம் ஒன்று, நேற்று காணாமல்போன நிலையில் அந்த விமானம் விபத்தை சந்தித்திருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | “யார் சொன்னா.. இவங்களாலும் மேட்சை வின் பண்ணி கொடுக்க முடியும்”.. போட்டி முடிந்ததும் பாண்ட்யா அதிரடி பேச்சு..!

காணாமல் போன விமானம்

நேபாள நாட்டின் போகரா பகுதியில் இருந்து ஜோம்சோமுக்கு நேற்று காலை 9.55 மணிக்கு கிளம்பிய 9 NAET விமானம், சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதன் காரணமாக அச்சம் எழுந்த நிலையில், அந்த விமானம் விபத்தை சந்தித்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள், மேலும், அந்நாட்டைச் சேர்ந்த 3 விமான குழு உறுப்பினர்கள் இருந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வழிகாட்டிய விமானியின் செல்போன்

விமானம் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விமானி பிரபாகர் கிமிரியின் செல்போனுக்கு கால் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, விமானிக்கு கால் சென்றதுடன் ரிங் ஆகியிருக்கிறது. இதன்மூலமாக GPS தொழில்நுட்பத்தின் மூலமாக, விமானம் இருக்கும் இடத்தை மீட்புப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

முஸ்டாங் மாவட்டத்தில் தசாங்கின் சனோ ஸ்வேர் பீர் என்ற இடத்தில் 14,500 அடி உயரத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த அசோக் குமார் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகியோர் பயணித்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோகம்

இதுகுறித்துப் பேசிய விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தியோ சந்திரசேகர் லால் கார்ன் "10 ராணுவ வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவ விமானம் ஒன்று, இதுவரையில் 14 உடல்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்த விபத்து குறித்து பயணிகளின் குடும்பங்களுடன் பேசிவருவதாக கூறியுள்ள நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம், விபத்து குறித்த அவசர அழைப்புக்கு +977-9851107021 என்ற எண்ணிற்கு மக்கள் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

22 பயணிகளுடன் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட விமானம், விபத்திற்குள்ளான சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | ‘இந்த மாதிரி நேரத்துல அவர் இல்லையே’.. கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்.. உருகும் ரசிகர்கள்..!

PILOT, PILOT PHONE, NEPAL PLANE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்