நம்ம ஊர்ல கட்டிப்பிடி வைத்தியம் மாதிரி.. அவுங்க ஊர்ல தலையணை போட்டி.. ரவுண்ட் கட்டிய வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்வீட்டில் சின்ன வயதில் சகோதரர்கள், சகோதரிகள் சண்டை போட்டுகொண்டால் ஏய் பிள்ளைங்களா அடிச்சுக்காம விளையாடுங்க. ரத்தம், காயம் படாத அளவிற்கு தலையணை சண்டை, கட்டிபிடித்து மோதிக்கொள்ளுவோம். இதுவரை செல்ல விளையாட்டுகளில் ஒன்றாக இருந்த தலையணை சண்டை, தற்போது குத்துச்சண்டைக்கு இணையான முழுமையான விளையாட்டாக மாறியுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக தலையணை சண்டையில் அதிகாரப்பூர்வ சாம்பியன்கள் உருவாகியுள்ளனர். இதனை Pillow Fight Championship (PFC) என்று அழைக்கின்றனர்.
இந்த தலையணை சண்டையில், பாக்சிங் மட்டுமன்றி பல்வேறு தற்காப்புக் கலைகளை பயன்படுத்தி, வீரர்கள் தலையணை சண்டையிட்டனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற மாகாணமான புளோரிடாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கிய தலையணை சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டிகள் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டு , வெற்றி பெற்ற வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது . இந்த போட்டியில் 16 ஆண்களும் எட்டு பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். ஆண்கள் - பெண்கள் என இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டது.
குத்துச்சண்டை , மல்யுத்தம் போன்ற விளையாட்டை கண்டு ரசித்த மக்களுக்கு சின்ன பிள்ளைகள் விளையாடும் தலையணை போட்டி பார்க்க சுவாரஸ்யமாகவும், மக்களின் கரைகோசங்களும் அரங்கை அதிர வைத்தன. இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவ் வில்லியம்ஸ் கூறுகையில், "தலையணையை வைத்து விளையாடுவது நம் அனைவருக்கு பிடித்த ஒன்று. இதனை ஒரு குத்துச்சண்டைக்கான வளையத்திற்குள் நிகழ்த்தினால் எப்படி இருக்கும் என யோசித்துதான் இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுருக்கிறார். பொதுவாக சண்டை என்றாலே கோபம் , ரத்தம், காயம் என அரங்கமே அதிர்ச்சியில் அமர்ந்திருக்கும் . பெரும்பாலோனர் இதனை விரும்புவதில்லை . அவர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் நோக்கில்தான் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தலையணை சண்டையில் போட்டியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரும் வயிறு குலுங்க சிரித்து போட்டியை ரசித்தனர். தலையணையை வைத்து போட்டியிடுகிறோம் இதில் என்ன சிரமம் இருக்கிறது என்று யூகிக்க வேண்டாம். போட்டியாளரின் கைகளில் இருந்து தலையணை பறிபோனால், எதிர்போட்டியாளர் துவம்சம் செய்துவிடுவார். இதற்காகவே அதிக எடை கொண்ட தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பிரேசிலைச் சேர்ந்த இஸ்டெலா நூனிஸ் பெண்கள் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலே டில்மேன் ஆண்களுக்கான பட்டத்தைத் தட்டிச் சென்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கான பெல்ட் , கோப்பை மற்று 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்கா அறிமுகம் செய்யும் புதிய விசா.. யாருக்கு சாதகம்.. நிறுவனங்கள் செம்ம ஹேப்பி
- இனிமேல் 'அந்த தடை' இல்ல...! 'இந்தியர்களுக்கு' செம 'ஹேப்பி' நியூஸ்...! - ஜோ பைடன் அரசு அறிவித்த 'முக்கிய' அறிவிப்பு...!
- வாழ்க்கையில 'அதிர்ஷ்டம்' எப்போ வேணும்னாலும் 'கதவ' தட்டலாம்...! 'ரொம்ப நாளா போகணும்னு நினச்சிட்டு இருந்த இடம்...' - தம்பதிகளுக்கு அடித்த 'வேற லெவல்' ஜாக்பாட்...!
- வெறும் 30 நிமிஷம் தான் ஜோ பைடன் 'போன்'ல பேசினாரு...! 'இதான்' விஷயம், என்ன சொல்றீங்க...? - 'உலகமே' உற்றுநோக்கும் 'ஆக்கஸ்' விவகாரத்தில் 'அதிரடி' திருப்பம்...!
- ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...! நாம எல்லாரும் ஒண்ணா நின்னு நம்ம 'பவர்' என்னனு 'அவங்களுக்கு' காட்டணும்... ! போடப்பட்டுள்ள 'AUKUS' கூட்டுத் திட்டம்...!
- உங்களுக்கு 'தில்' இருக்கா...? 'இல்லன்னா திரும்பி பார்க்காம போய்கிட்டே இருங்க...' '13 மூவீஸ் பார்த்து பணத்த அள்ளிட்டு போகலாம்...' - லிஸ்ட்ல 'என்னெல்லாம்' படங்கள் இருக்கு...?
- இப்படியொரு 'ராக்கெட்' லாஞ்சரா...! 'இனி எவனாச்சும் நம்மள நெருங்கட்டும், அப்புறம் இருக்கு...' - வயித்துல புளிய கரைக்குற மாதிரி 'மாஸ்' சம்பவம் செய்த நாடு...!
- 'அங்க' வச்சு என்ன 'பேசினோம்'னு மறந்துட்டீங்க இல்ல...? 'இதெல்லாம்' நல்லாவா இருக்கு...? - தாலிபான்கள் கடும் கண்டனம்...!
- என்னங்க இது அநியாயம்...? 'நம்ம ஊர்ல ரோட்டு சைடுல சும்மா கெடக்கும்...' 'அத போய் ரூ.1,800-க்கு ஆன்லைன்ல விக்குறாங்க...' - அதுக்கு புதுசா 'பெயரு' கூட வச்சிருக்காங்களாம்...!
- 'என்ன' செய்யணுமோ 'அத செஞ்சிட்டு' தான் கிளம்பியிருக்கோம்...! தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பே இல்ல ராஜா...! - 'நாங்க'லாம் அப்போவே அப்படி...!