முன்னாடி டிராகன் மீன்.. இப்போ இதுவா..? நெட்டிசன்களை நடுங்க வச்ச வினோத மீன்.. வைரலாகும் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மஞ்சள் நிறக் கண்களோடு இருக்கும் வினோத மீனை பிடித்துள்ளார் ரஷ்யாவை சேர்ந்த மீனவர் ஒருவர். அந்த மீனின் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவரான ரோமன் ஃபெடோர்சோவ் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 39 வயதான ரோமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருக்கிறார். வலை வீசிய ரோமன் சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு தனது அதிர்ஷ்டத்தை சோதித்திருக்கிறார். வலையை அவர் வெளியே எடுக்க, அதன் உள்ளே வித்தியாசமான ஏதோ ஒன்று இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

வலையை படகிற்குள் இழுத்த ரோமன், உள்ளே இருந்த வித்தியாசமான மீனை வெளியே எடுத்திருக்கிறார். மஞ்சள் நிற கண்களும், கருப்பு நிறத்துடனும் காணப்படும் இந்த மீனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரோமன். தற்போது அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சாகச பயணம்

ரோமன் ஃபெடோர்சோவ் உலகம் முழுவதிலும் உள்ள கடல்களில் பயணம் செய்து, அங்குள்ள வித்தியாசமான கடல் உயிரினங்களை பிடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மறக்காமல் தன்னுடைய வலையில் சிக்கும் உயிரினங்களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வழக்குமும் ரோமனுக்கு உண்டு. இதன் காரணமாகவே 65,000 பேர் ரோமனை இன்ஸ்டாகிராம்  பின்பற்றிவருகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் டிராகன் வடிவிலான சிமேரா (chimaera) என்னும் மீனை நார்வே கடல் பகுதியில் பிடித்தார் ரோமன். பார்ப்பதற்கு குட்டி டிராகன் போலவே இருக்கும் இந்த மீனை புகைப்படம் எடுத்து ரோமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது வைரலானது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் நிற கண்கள்

கடந்த 9 ஆம் தேதி ரோமன் பிடித்த இந்த வினோத மீன் 1100 அடிகளுக்கு கீழே வலையில் சிக்கியுள்ளது. இருப்பினும் மஞ்சள் நிற கண்கள் கொண்ட இந்த வித்தியாசமான மீன் குறித்த தகவல்கள்  வெளிவரவில்லை.

புகழ்பெற்ற வினோத மீன்பிடி வல்லுனரான ரோமன் தற்போது பிடித்திருக்கும் இந்த மஞ்சள் நிற கண்கள் கொண்ட மீனின் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

FISHING, RAREFISH, SEA, மீன், கடல், மீன்பிடித்தல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்