கூடிய சீக்கிரம் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விடும்...! 'சீனாவின் நிலைமையை முன்கூட்டியே கணித்து சொன்னவர்...' நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நம்பிக்கை...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பரவிய எண்ணிக்கையை முன்பே கூறிய நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் மீண்டும் நம்பிக்கை தரும் வகையில் மற்றுமொரு செய்தியை கூறியுள்ளார்.

கடந்த 4 மாதங்களாக உலக நாடுகளை தடுமாற்றம் அடைய வைத்துள்ளது கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில் பரவிய போது அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்னும் உயிர் சேதம் அதிகம் ஏற்படும் என்று அனைத்து உலக நாடுகளும் பயந்து கொண்டிருந்தது.

அந்நிலையில் 'இந்த கொரோனா வைரஸ் தொற்று இனி விரைவில் முடிவுக்கு வரும்' என  தற்போதைய சீனாவின் நிலையை அன்றே கணித்து கூறினார் நோபால் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட்.

மேலும் சீனாவில் கொரோனா வைரசால் கிட்டத்தட்ட 80,000 பேர் மட்டும் பாதிக்க படுவார்கள் எனவும், அதில் சுமார் 3250 பேர் வரை உயிரிழக்க கூடும் என கணித்திருந்தார். அவர் கூறியவாறே தற்போது சீனாவில் கிட்டத்தட்ட 81,171 பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3277 ஆகவும் இருக்கிறது.

தற்போது அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், கொரோனா நோய்த்தொற்று படிபடியாக குறையும் எனவும், 78 நாடுகளில் நாள் தோறும் 50 பேருக்கு நோய்தொற்று ஏற்படுவதாக தெரிவித்தார்.

சீனாவை விட இத்தாலியில் தொற்று விகிதம் அதிகம் இருக்க காரணத்தை கேட்டதற்கு, அந்த நாட்டில் நிலவும் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையே மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் இருந்த பலருக்கு  கொரோனா சோதனை செய்ய முடியாமல் போனதாலேயே உயிரிழப்புகள் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவிய நேரத்தில் சீனா மேற்கொண்ட தனிமைப்படுத்தும் முறை பெருமளவில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய தன்மைகளை கொண்டுள்ளதால் கொரோனா வைரசுக்கு மருந்து தயாரிக்க சிறிது தாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நிலைமை மீண்டும் சரியாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு முன் இவர் சீனாவில் இறப்பு விகிதம் அதிக அளவில் இருக்காது என கூறியபடி நடந்ததால், தற்போது பேட்டியில் இவர் கூறிய வார்த்தைகளால் அனைவரது மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் லேவிட்.

CORONAVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்