இதனால்தான் ‘சிங்கம்’ மெலிந்து காணப்படுகிறது... மூன்றில் இரண்டு பங்கு எடை இழந்துவிட்டதாக தகவல்... பரிதாபமாக காட்சியளிக்கும் சிங்கங்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்பிரிக்க நாடான சூடான் தலைநகரான கார்டூமில் அல்-குரேஷி விலங்கியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த குரேஷ் பூங்கா, கார்டூம் நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கார்டூம் நகராட்சி தரும் நிதி மற்றும் தனியார் நிதியின் மூலமே பூங்காவிலுள்ள விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் பராமரிப்பு செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சிங்கங்களுக்கு அளிக்க போதுமான உணவு மற்றும் மருந்து இல்லாததால் ஊழியர்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர். இதன் காரணமாகவே அவை உடல் மெலிந்து பார்ப்பதற்கு பரிதாபமாக காட்சியளிக்கின்றன.

இதுகுறித்து தெரிவித்த பூங்கா அதிகாரிகள், “அந்த ஐந்து சிங்கங்களில் சில மூன்றில் இரண்டு பங்கு எடையை இழந்துள்ளது’ என்றனர். அதில், ஒரு சிங்கத் சூடானில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு மற்றும் அந்நியச் செலவாணியின் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார சிக்கல் எழுந்துள்ளது. தற்போது பரிதாப நிலையில் காட்சியளிக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

 

LION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்