'எங்க சுடு பாப்போம்...' 'இதுக்கெல்லாம் அசருற ஆள் நான் கெடையாது...' 'பயமா' அது எங்க விக்குது...? - நெஞ்சை நிமிர்த்தி நின்ற பெண்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட துவங்கியுள்ளனர்.

பொதுவாகவே தாலிபான் அடிப்படைவாத கொள்கை கொண்ட அமைப்பு என்பதால் அவர்களின் ஆட்சியின் போது பெண்கள் அனைத்து துறைகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவார்கள். இந்த முறை தாலிபான் மீண்டும் ஆப்கானை கைப்பற்றிய நிலையில், 'நாங்கள் முன்பு போல் இல்லை, பெண்களுக்கு அவர்களின் சுதந்திரத்தை அளிப்போம்' என்றெல்லாம் கூறினர்.

ஆனால் களநிலவரப்படி, சர்வதேச சமூகம் ஆப்கானில் இருக்கும் பெண்கள் நிலை என்னவாகுமோ என்று அச்சம் தெரிவித்து வருகின்றது. இது ஒருபுறம் இருக்க 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற தொனியில் ஆப்கான் பெண்கள் வீதிகளில் இறங்கி போராடக் கிளம்பியுள்ளனர்.

அந்தப் போராட்டத்தில் முக்கிய அம்சமாக ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு காரணம் தாலிபான்கள் அறிவித்துள்ள 33 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு பெண்ணுக்குக் கூட அவர்கள் வாய்ப்பளிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் தாலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அரசியலில் அதிகாரம் வேண்டும் என கடந்த செவ்வாய்க் கிழமை அன்று பெண்கள் நடத்திய போராட்டத்தில் பெண் ஒருவர் தாலிபானின் துப்பாக்கியை நேருக்கு நேர் நெஞ்சை நிமிர்த்து நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் எடுத்த இந்தப் புகைப்படத்தை, ஆப்கானிஸ்தானின் டோலோ செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஜாரா ரஹிமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'தாலிபான் துப்பாக்கி முனைக்குப் பயப்படாமல் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் ஆப்கான் பெண்' என பதிவிட்டுள்ளார்.

பெண்கள் நடத்தும் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த வானை நோக்கி துப்பாக்கியால் தாலிபான்கள் சுட்டனர். அதில், ஆப்கானை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பவரை தாலிபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்