"ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இப்போ இப்படி ஒரு நிலைமை".. வைரல் புகைப்படத்தின் கலங்கவைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியால் பத்திரிக்கையாளர் ஒருவர் தெரு ஓரங்களில் உணவு பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "கொரோனா மாதிரியே இன்னொரு நோய் பரவுது".. வட கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத நோய்.. பரபரப்பில் உலகம்..!

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் மீண்டும் ஆட்சியை பிடித்தது தாலிபான். அதைத் தொடர்ந்து அந்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகளை கவலை தெரிவித்துவருகின்றன. சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் தாலிபான் அரசு பின்தங்கியுள்ளது. அந்நாட்டில் நிலவிவரும் உணவு தட்டுப்பாட்டை போக்க ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், தாலிபான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளராக பணியாற்றிய ஒருவர் தற்போது சாலை ஓரங்களில் உணவு பொருட்களை விற்றுவரும் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வறுமை

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்ஸாய் அரசில் பணிபுரிந்தவர் கபீர் ஹக்மல். இவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இளம் பத்திரிகையாளரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் மூசா முகமதி என்னும் பத்திரிக்கையாளருடையது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைவதற்கு முன்பாக, பல்வேறு தனியார் ஊடகங்களில் பணியாற்றி வந்தார் மூசா.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, வேலை இழந்தவர்களில்  மூசா முகமதியும் ஒருவராவார். இந்நிலையில் வறுமை காரணமாக சாலை ஓரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்துவருகிறார் மூசா.

வைரல் ட்வீட்

ஹக்மல் தனது ட்விட்டர் பக்கத்தில்,"மூசா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும் நிருபராகவும் பணிபுரிந்தார். இப்போது அவரது குடும்பத்திற்கு உணவளிக்க வருமானம் போதிய இல்லை. பணம் சம்பாதிக்க தெரு ஓரங்களில் உணவுகளை விற்கிறார் மூசா. ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாறியபிறகு மக்கள் கடும் வறுமையில் சிரமப்பட்டு வருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் தனிநபர் வருமானம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளதால் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக உலக வங்கி சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கான உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக் இதுபற்றி பேசுகையில் "உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று மிகவும் ஏழ்மையானதாக மாறியுள்ளது" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | என்னங்க சொல்றீங்க? ரூபாய் நோட்டு பேப்பர்-ல தயாரிக்கலயா?.. இவ்வளவு நாளா இதுதெரியாம போச்சே..!

JOURNALIST, AFGHANISTAN, PHOTO OF JOURNALIST SURVIVING IN AFGHANISTAN, AFGHANISTAN TV JOURNALIST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்