‘ஃபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு’.. ‘முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஃபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்ததுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிரபலமான செயலிகளில் ஒன்றாக உள்ளது  ஃபேஸ்புக். இந்நிலையில் அதன் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த டெக் க்ரஞ்ச் என்ற நிறுவனம் கூறியுள்ளது. பயனாளர்களின் சுய விவரங்களுடன், அவர்களுடைய செல்ஃபோன் எண்களும் இணையத்தில் கசிந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில், “அமெரிக்காவைச் சேர்ந்த 11 கோடி பேர்,  இங்கிலாந்தைச் சேர்ந்த 1 கோடியே 80 லட்சம் பேர் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த 5 கோடி பேரின் தகவல்கள் கசிந்துள்ளது. சில பயனாளர்களின் ஐடி, பெயர் மற்றும் செல்ஃபோன் எண்களும் கசிந்துள்ளதால் பயனாளர்கள் தேவையற்ற அழைப்புகளை ஏற்கும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சில பயனாளர்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்களுடைய சில முக்கியமான தகவல்களும் கசிந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக தகவல்கள் திருடப்பட்டுவிட்டதாக இதற்கு விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் அவை அனைத்தும் பழைய தகவல்கள் எனவும் கூறியுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சியின் ஐடி ஹேக் செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

FACEBOOK, USERID, NAME, PHONENUMBER, LEAK, SHOCKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்