எரிமலையை சுத்தி ஒரே நாள்ல 77 முறை நிலநடுக்கம்.. "ஏதோ வித்தியாசமா நடக்குது..யாரும் கிட்ட போய்டாதீங்க".. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள எரிமலை ஒன்று சாம்பலை வெளியிட துவங்கியுள்ளதால், மக்கள் யாரும் அதன் அருகே செல்லவேண்டாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "குரங்கு அம்மையை தடுக்கணும்னா இந்த 5 விஷயத்தையும் உடனடியா செஞ்சாகனும்".. உலக நாடுகளுக்கு WHO கொடுத்த எச்சரிக்கை..!

எரிமலை

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவிற்கு தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது புலுசன் எரிமலை. நேற்று காலை 10.37 மணியளவில் இந்த எரிமலை சாம்பலை வெளியிட துவங்கியுள்ளதாகவும், இதனால் அருகில் உள்ள நகரங்களில் சாம்பல் மழை பொழியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 17 நிமிடங்களுக்கு நீடித்த இந்த நிகழ்வில் 1 கிலோ மீட்டர் உயரம் வரையில் சாம்பல் மேலெழுந்திருப்பதாக கூறுகின்றனர் பிலிப்பைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் வோல்கானாலஜி அண்ட் சீஸ்மோலஜி-யை சேர்ந்த அதிகாரிகள்.

நிலநடுக்கம்

மணிலாவின் சோர்சோகன் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த எரிமலையில் கடந்த 24 மணி நேரத்தில் 77 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் எரிமலை அபாயகரமான அளவில் சாம்பலை வெளியிடலாம் என்பதால் எரிமலை அமைந்துள்ள 4 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மக்கள் யாரும் நுழைய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அதிகாரிகள்,'புலுசான் எரிமலை பகுதியில் முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலை அசாதாரண நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அது வெடிப்பை வெளிப்படுத்தலாம். பள்ளத்தாக்குகள் மற்றும் நதி ஓரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்" என எச்சரித்துள்ளனர்.

என்ன காரணம்?

எரிமலை அடியில் அல்லது மேல்பகுதியில் நீர் சூடான பாறைகள் அல்லது மேக்மாவால் வெப்பமடைந்து நீராவியாக மாறி, எரிமலையின் வாய்வழியாக அதிவேகமாக சாம்பலை வெளிவிட்டு வருவதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், அருகில் உள்ள மக்கள் எரிமலை பகுதிக்கு செல்லவேண்டாம் என எச்சரித்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய இன்ஸ்டிட்யூட்டின் தலைவரான ரெனாடோ சாலிடம்," புலுசன் எரிமலை இவ்வாறு சாம்பலை வெளிவிடுவது புதிதல்ல. நீராவி அதிவேகமாக வெளிப்படுவதால் இந்த சாம்பல் மண்டலம் உருவாகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றுதான். எரிமலையை சுற்றி 4 கிலோமீட்டர் எல்லைக்குள் யாரும் நுழையக்கூடாது. மக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் தேவைப்படாத நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் ஆகியவை அவசியமாகும்" என்றார்.

Also Read | "ஐ.. நாம ஆர்டர் பண்ண போன் வந்துருச்சு.." பார்சல பிரிச்ச இளைஞருக்கு ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு

PHILIPPINES, PHILIPPINES RAISES ALERT LEVEL, SOUTHEAST OF MANILA, VOLCANO SOUTHEAST OF MANILA, பிலிப்பைன்ஸ், எரிமலை, புலுசன் எரிமலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்