ஒரு மாசத்துக்கு முன் காணாம போன விமானத்தின் நொறுங்கிய பாகங்களுடன் கிடைத்த மனித உடல்கள்!!.. அதிர்ச்சி பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக விமானம் ஒன்று காணாமல் போன சூழலில், அது பற்றி தற்போது தெரிய வந்துள்ள தகவல், உலகளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | தங்க மாட்டல் போடனும்ன்னு 25 வருசமா கனவு கண்டாங்க.. சர்ப்ரைஸ் கொடுத்து தாயை கண்கலங்க வெச்ச மகள்!!.. எமோஷனல் வீடியோ!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் இசபெலா என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி விமானம் ஒன்று புறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

காணாமல் போன விமானம்

அப்படி இருக்கையில், இந்த விமானம் புறப்பட்டு சென்ற கொஞ்ச நேரத்திலேயே அது மாயம் ஆனதாக சொல்லப்படுகிறது. கொஞ்ச நேரத்திலேயே இப்படி நடந்ததால் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. செஸ்னா என்ற இந்த சிறிய விமானம் இசபெலா என்ற மாகாணத்தில் உள்ள கடலோர நகரத்திற்கு சென்ற சமயத்தில் அதன் இலக்கை அடைய முடியாமல் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு மாதம் கழிச்சு கிடைத்த தகவல்

இதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக காணாமல் போன விமானத்தை அதிகாரிகள் தேடி வந்துள்ளனர். அப்படி இருக்கையில், செஸ்னா விமானத்தின் சிதைந்த பாகங்களையும், அதில் இருந்த 6 பேரின் உடல்களையும் தேடுதல் மற்றும்  மீட்பு அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தற்போது உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Images are subject to © copyright to their respective owners.

விபத்துக்கான காரணம் என்ன?

அதே போல, கடலோர நகராட்சிக்கு அருகிலுள்ள காடுகள் நிறைந்த மலைச் சரிவில் மீட்புக் குழுவினர் விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் சிதைந்த பாகங்களை அதன் நிறம் மற்றும் வால் எண் மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, விமானத்தின் சிதைந்த பாகங்கள் அருகே மீட்கப்பட்ட உடல்களை மீட்டு வருவதாகவும், மேலும் நிலப்பரப்பு மற்றும் வானிலை காரணமாக அவற்றை கீழே கொண்டு வர நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தின் காரணம் தொடர்பாக வெளியான தகவல்களின் படி, விமானம் பிளவுபட்டதாகவும், அதன் துண்டுகள் மலைச் சரிவில் சிதறி விபத்து நேர்ந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Also Read | ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு.. சோகத்தில் ரசிகர்கள்.. கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய வீரர்கள்!!

FLIGHT, PHILIPPINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்