"அவங்களும் சந்தோஷமா இருக்கட்டுமே".. சிங்கிள்ஸ்-க்கு சிறப்பு போனஸ்.. காதலர் தினத்தன்று மேயர் கொடுத்த சர்ப்ரைஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்களின் மனது புண்படக்கூடாது என்பதற்காக மேயர் ஒருவர் போனஸ் அளித்து வருகிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | 9 பேருடன் கல்யாணம்.. எல்லார்கிட்டயும் சொன்ன ஒரே பொய்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!  

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான கதைகளும் இருக்கின்றன. ஆனால் பொதுவாக அன்றைய தினத்தில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க காதலிக்காமல் சிங்கிள் ஆகவே இருக்கும் நபர்கள் தங்களைப் பற்றியும் மீம்கள் மூலமாக பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக காதலர் தினத்தன்று சிங்கிள்களின் மொத்த கற்பனை திறனும் வெளிப்படும்.

இந்த சூழ்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் விநோத சம்பவம் மற்றும் நடைபெற்றிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜெனரல் லூனா நகரத்தின் மேயராக பணிபுரிந்து வருபவர் இடம் மாட் ப்ளோரிடா. இவர் காதலர் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தினத்தன்று போனஸ் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

காதலர் தினத்தன்று பணிக்கு வரும் சிங்கிள்களுக்கு ஒரு ஊதியம் மட்டுமல்லாது கூடுதல் தொகை போனசாக கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தினசரி ஊதியத்தில் மூன்று மடங்கு தொகை போனசாகவும் மற்ற ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு தொகை போனதாகவும் வழங்குவதாக சொல்கிறார் ப்ளோரிடா. போனஸ் பெற விரும்பாதவர்களுக்கு ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இது குறித்து அவர் பேசுகையில், "காதலர் தினத்தன்று சிங்கிள்கள் எப்படி இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்களின் சூழ்நிலையை நான் உணர்கிறேன். காதலர் தினத்தன்று அவர்களுக்கு பரிசுகளை வழங்கவோ இனிப்புகளை பரிமாறவோ யாரும் இருக்க மாட்டார்கள். அதனாலேயே இது போன்று போனஸ் தொகையை கொடுக்க நினைத்தோம். இதன் மூலம் நம்மை கவனித்துக் கொள்ளவும் நம்மை நேசிக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். நம் மீதும் அன்பு காட்டவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். ஆகவே இந்த நடவடிக்கையில் இறங்கினோம்" என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

சிங்கிளாக இருக்கும் தனது ஊழியர்களுக்கு போனஸ் தொகையை வழங்கிவரும் ப்ளோரிடாவும் ஒரு சிங்கிள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய இந்த முயற்சி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண் மாயம்.. ஃபிரிட்ஜை திறந்தபோது திகைச்சு நின்ன போலீஸ்.. ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த அடுத்த பயங்கரம்..!

PHILIPPINE MAYOR, BONUS, SINGLES, VALENTINE DAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்