'நாங்க நெனச்சது மாதிரியே...' 'எல்லாம் நல்லபடியா நடந்துச்சுன்னா...' இனிமேல் கொரோனா தடுப்பூசிய 'இப்படியும்' போட்டுக்கலாம்...! - பைஸர் நிறுவனம் வெளியிட்டுள்ள 'அல்டிமேட்' தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு இன்னும் பரிசோதனை அளவிலேயே மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுவும் ஊசி வடிவிலேயே எல்லா நாடுகளிலும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பைஸர் நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போர்லா கொரோனா வைரஸிற்கு வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான மருந்துகளை தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து நாங்கள் கொரோனாவுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினோம்.

ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து. பொதுவாக ஊசியாக போட்டுக்கொள்ளும் தடுப்பூசியை விட, வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்தே மருந்து எடுத்துக் கொள்ளலாம்.

நாங்கள் நினைத்தது படி நடந்து, எல்லா நல்லபடியாகச் சென்றால் இந்த ஆண்டின் இறுதியில் வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்