என்னய்யா சொல்றீங்க.. கடலில் கலந்த எண்ணெயை கிளீன் பண்ண ‘முடியை’ தானமாக கொடுக்கும் மக்கள்.. ஐடியா ரொம்ப புதுசா இருக்கே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெரு நாட்டில் கடலில் கலந்த எண்ணெய் படலத்தை நீக்க ஏராளமான மக்கள் தங்களது முடியை தானமாக வழங்கி வருகின்றனர்.

Advertising
>
Advertising

கடலில் கசிந்த எண்ணெய்

பெரு நாட்டில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு சென்ற கப்பலில் ஏற்பட்ட கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 3 கிலோமீட்டர் அளவுக்கு கடலில் எண்ணெய் படலம் ஏற்பட்டது. 6000 பேர்லல் எண்ணெய் கடலில் கலந்துள்ளதாகவும், அதனால் 21 கடற்கரைகள் எண்ணெய் கழிவால் மாசடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதிய யுக்தி

தற்போது கடற்கரையில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், எண்ணெய் கசிவை அகற்ற பெரு சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. முடியை கயிறு போல உருளை வடிவில் திரித்து அதனை கடற்கரை அலைகளில் மூழ்கடிக்கும்படி செய்வதால் நீரில் உள்ள எண்ணெய் படலங்களை முடி உறிஞ்சிவிடும் என கூறப்படுகிறது.

முடிதானம்

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பல டன் கணக்கிலான முடி தேவைப்படும் நிலையில், எண்ணெய் படலத்தை அகற்ற பொதுமக்கள் தங்கள் முடியை தானமாக வழங்கலாம் என அந்நாட்டு அரசு சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையில் பெண்ணிடம் செயினை பறித்த நபர்.. எதுக்காக திருடி இருக்காரு தெரியுமா..? வெளியான ‘ஷாக்’ தகவல்..!

டோங்கோ எரிமலை வெடிப்பு

இதனை அடுத்து சிகை அலங்கார நிபுணர்கள் உதவியுடன் லிமா நகராட்சி அலுவலகத்தில் முடி சேகரிப்பு மையமும் அமைக்கப்பட்டது. இதனை அறிந்த அந்நாட்டு மக்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்கள் முடியை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். சமீபத்தில் டாங்கோ தீவில் கடலுக்குள் எரிமலை வெடித்ததின் எதிரொலியாக பெருவில் எழுந்த உயர் அலைகளால் கப்பலில் இருந்து எண்ணெய் கசித்துள்ளதாக பெரு நாட்டு அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.

1945-ல் மாயமான விமானம்.. இத்தனை வருஷமா 'இங்க' தான் கெடந்துச்சா? வியக்க வைக்கும் ஆச்சரியம்

PERU PEOPLE DONATING HAIR, ASSIST OIL CLEAN-UP, PERUVIANS, முடிதானம்

மற்ற செய்திகள்