என்னது ஒரு லிட்டர் பால் இவ்ளோ விலையா..? போராட்டத்தில் இறங்கிய மக்கள்..என்ன நடக்கிறது இலங்கையில்..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Advertising
>
Advertising

வறுமையில் தவித்த பள்ளி மாணவி.. ஆசிரியர்கள் செஞ்ச செயல்.. அந்த மனசுதான் சார் கடவுள்..!

எகிறும் விலைவாசி

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறைகள் மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உலக அளவில் பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அண்டை நாடான இலங்கையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பால், அரிசி, பிரெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அங்கே அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் இலங்கையில் பால் ஒரு லிட்டர் 263 (இலங்கை) ரூபாய்க்கும், அரிசி ஒரு கிலோ 448 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து உள்ளன. இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.283 க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. இலங்கையில் ஒரு முட்டை 28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் ஒரு ஆப்பிள் 150 ரூபாய்க்கும் ஒரு கிலோ பேரீச்சம்பழம் 900 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றன.

அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்ததால், வெளிநாடுகளில் இருந்து சமையல் எரிவாயு இறக்குமதி செய்யவும் இலங்கையால் முடியாமல் போயிருக்கிறது. இந்நிலையில், இலங்கையின் மிகப்பெரிய கேஸ் நிறுவனங்களான லிட்ரோ கேஸ் மற்றும் லாக்ஸ் கேஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து உள்ளதால் வேலை வாய்ப்பும் மோசமான சரிவை சந்தித்துள்ளது. வறுமை ஒருபக்கம் விண்ணை தொடும் விலைவாசி ஒருபக்கம் என இலங்கை மக்கள் துயரத்தில் தவித்து வருகின்றனர். அந்நாட்டு நாணயத்தின் மதிப்பும் கீழே சரிந்திருப்பது அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.

போராட்டம்

அதிகரித்துவரும் விலைவாசி காரணமாக அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடனடியாக பதவி விலகக் கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இலங்கை நாணயத்தில் மதிப்பை 36 சதவீதமாக அந்நாட்டு அரசு குறைத்தும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக இலங்கையின் முக்கிய நகரங்களில் மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

"நான்தான் சொன்னேன்.. என்கிட்டே உங்க கோபத்தை காட்டுங்க".. பிரதமர் மோடி ஓபன் டாக்.. என்ன நடந்துச்சு..?

PEOPLES, SRILANKA, PROTEST, ECONOMIC CRISIS, இலங்கை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்