“சொன்னா கேக்கவே மாட்டிங்குறாங்க!”.. பொதுமக்களின் இந்த முடிவால் டேஞ்சர் ஸோனில் இருக்கும் ‘நகரங்கள்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனின் பிளாக் பர்ன் மற்றும் லங்காஷயர் நகரங்களில் பொதுமக்கள் கொரோனாவை எதிர்க்கும் விதமாக கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய ஆயுதமான மாஸ்க்கை அணியாமல் இருப்பதால் கொரோனா தொற்று வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த  ஜூலை 11-ஆம் தேதி வரை 1 லட்சம் பேருக்கு 47.7 சதவீதம் அளவில் இருந்த கொரோனா தொற்று தற்போது 78.6 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலையில், தற்போது சமூக இடைவெளி மற்றும் கொரோனா பரவல் தடுப்பினை கடைபிடிக்கும் விதமாக அணிய வேண்டிய மாஸ்க்கினை பொதுமக்கள் பலர் அணிய மறுப்பதால், பலரும் தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்ப கூட அச்சப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அண்மையில் காற்றின் மூலம் கொரோனா பரவி, சமூகத் தொற்றுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்த நிலையில், மேற்கூறிய நகரங்கள் மாஸ்க் அணியாத மக்களால் மேற்கொண்டு மோசமான நிலைமையை சந்தித்து வருவதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்