மரத்தில் தொங்க விடப்படும் ‘மாஸ்குகள்’.. பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நம்பிக்கை.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவை குணப்படுத்தும் நம்பிக்கையில் பிரான்ஸ் நாட்டு மக்கள் மாஸ்குகள் மரத்தில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள கோயில்களில் குழந்தை வேண்டி தொட்டில் கட்டுவது, மஞ்சள் துணிகள் கட்டுவது வழக்கம். அதேபோல பிரான்ஸ் நாட்டிலும் மக்கள் மரத்தில் துணி கட்டி வழிபட்டு வருவது தெரியவந்துள்ளது. வட பிரான்ஸின் ஹஸ்னான் என்ற பகுதியில் உள்ள மரங்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக அங்கு வசிக்கும் மக்கள் நம்பி வருகின்றனர்.

இந்த மரத்துக்கு ‘ஸ்பிரிச்சுவல் மரம்’ என அவர்கள் அழைத்து வருகின்றனர். மரக்கிளைகளில் தங்களது நோய்கள் குணமாக வேண்டி துணிகளை கட்டி வழிபடுகின்றனர். ரோமானியர்கள் காலத்துக்கு முன்பே இந்த வழக்கம் இங்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது மக்கள் பலரும் கொரோனா குணமாக வேண்டி மாஸ்குகளை கட்டி தொங்க விட்டு வருகின்றனர். இதனால் மரம் முழுவதும் மாஸ்குகள் நிறைந்து காணப்படுகிறது.

இதுகுறித்து ஹஸ்னா பகுதியை சேர்ந்த போஸியோ என்பவர் கூறுகையில், ‘அயர்லாந்து நாட்டிலும் மக்கள் மரத்தில் துணிகளைக் கட்டி வேண்டிக்கொள்வார்கள். பல நாடுகளில் இந்த பழக்கம் உள்ளது. மருத்துவம் மற்றும் அறிவியல் தோற்றுப்போகும் போது மக்கள் கடவுளை நம்பத் தொடங்கிவிடுகின்றனர்’ என அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்