Cardiac arrest in South Korea Holloween : 150 பேர் உயிரை குடித்த ஹாலோவீன் திருவிழா .. மாரடைப்பிலும் கூட்ட நெரிசலிலும் கொத்து கொத்தாக மரண ஓலம்.. தென் கொரியாவில் சோகம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் கொரியா நாட்டில் ஹாலோவீன் விழாவிற்காக மக்கள் கூடி இருந்த நிலையில், இதனிடையே நடந்த சம்பவம் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஹாலோவீன் (Halloween) பண்டிகை என்பது பல உலக நாடுகளில் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இட்டவோன் என்னும் நகர் அமைந்துள்ளது. இங்கே ஒவ்வொரு வருடமும் ஹாலோவீன் திருவிழா நடப்பது வழக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, கொரோனா தொற்று காரணமாக ஒரு சில ஆண்டுகள் இங்கே விழா நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், கொரோனா தொற்று காலத்திற்கு பின்னர், முகக்கவசம் இன்றி ஹாலோவீன் திருவிழாவில் கூடலாம் என்றும் அனுமதி வழங்கப்படிருந்ததால் ஏரளமான மக்கள் கூடி இருந்தனர்.
சுமார் 1 லட்சம் பேர் வரை அங்கே திரண்டிருந்த நிலையில்; அந்த இடமே திருவிழா கோலம் பூண்டிருந்துள்ளது. இதன் காரணமாக, கூட்ட நெரிசலும் அங்கே உருவாகி உள்ளது. இதற்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பலரும் சிக்கிக் கொண்டனர். இதனால், பலரும் கீழே விழ தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நெரிசலில் எக்கச்சக்க மக்கள் சிக்கிக் கொள்ள, கூட்டத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், சியோலில் நடைபெற்ற இந்த ஹாலோவீன் திருவிழாவில் இதுவரை 155 க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு மூலம் பலி ஆனதாகவும் வீடியோக்கள் பரவி வருகிறது. அதே போல, 150 க்கும் மேற்பட்டோர் வரை நெரிசலில் காயம் அடைந்திருப்பதாகவும், இன்னும் பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தவிர, இன்னும் ஆயிரக்கணக்கானோர் கூட்ட நெரிசலில் சிக்கி கிடப்பதால் பலி எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் பலியாகி வரும் சம்பவம், தென் கொரியா மட்டுமில்லாமல் உலக நாடுகளையும் கடுமையாக உலுக்கி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "Love-க்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல".. நாடுகளைக் கடந்த காதல்.. தென் கொரிய காதலியை கரம் பிடித்த தமிழக வாலிபர்!!
- மாஸ்க் இல்ல.. இதுக்கு பேரே வேற.. எப்படியெல்லாம் யோசிக்குறாய்ங்க இந்த ஊரு காரய்ங்க
- ஒரு 'ஏவுகணை' இத்தனை 'வேலை' செய்யுமா...? 'அசுரத்தனமான பவர்...' 'அலற விடும் நாடு...' - 'அணு' ஆயுதத்தையே அடிச்சு நொறுக்கிடும்...!
- இது பச்சை துரோகம்...! இது 'continue' ஆச்சுன்னா நாங்க சும்மா விடமாட்டோம்...! 'நாங்க ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணியாச்சு...' - கடும் 'எச்சரிக்கை' விடுத்த கிம் ஜாங் உன்னின் சகோதரி...!
- 'நம்பர் லாக் போட்டுட்டா...' என்னால வீட்டுக்குள்ள நுழைய முடியாதா...? பூனை செய்த 'வேற லெவல்' சம்பவம்...! - அசந்துப்போன வீட்டு ஓனர்...!
- இது கொரோனா 'சீசன்'ல... "காத்துலேயே 'வேகமா' பரவுதாம்"... "நமக்கு எதுக்கு வம்பு"ன்னு... 'ரூபாய்' நோட்டுகளை வாஷிங் 'மிஷின்'ல போட்டு... சுத்தம் செஞ்ச 'நபர்'!!
- 'பொண்ணுக்கு கடைசி'யா ஒரு 'மெசேஜ்'... மாயமான மேயர்... '7 மணி' நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சடலமாக மீட்பு...! - நாட்டின் சக்தி வாய்ந்த தலைவருக்கு நேர்ந்த துயரம்!
- 'யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலியே'... 'இறங்கிய வேகத்தில் எகிறிய கொரோனா '.... 'என்ன செய்ய போறோம்'... அச்சத்தில் மக்கள்!
- தொடக்கம் முதலே கொரோனாவை 'சிறப்பாக' கையாண்டு... பாராட்டுகளை 'குவித்த' நாட்டுக்கு... 'புதிதாக' எழுந்துள்ள சிக்கலால் 'அச்சம்'...
- 'இன்னும்' முடியல... 'அதிரடி' நடவடிக்கைகளால் கொரோனாவை 'வென்றும்'... மக்களை 'அதிர்ச்சியில்' ஆழ்த்தியுள்ள 'எச்சரிக்கை'...