'அறிவிப்பு' வந்த உடனே 'பாஸ்போர்ட்' அலுவலகத்தில் குவிந்த ஆப்கான் மக்கள்...! - இரவு பகல் பாராமல் 'நீண்ட' வரிசையில் காத்திருப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் வெளிநாடுகளுக்கு செல்லும் பாஸ்போர்ட் வழங்கும் துறை தொடங்கியுள்ளதால் அங்கு வரிசையாக மக்கள் நிற்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கை இன்றளவும் திரும்பவில்லை. அதோடு தாலிபன்களும் நாங்கள் திருந்திவிட்டோம் முன்பு போல் இல்லையென்று கூறி வந்தாலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் அங்கு வசிக்கும் மக்களுக்கு உகந்ததாக இல்லை.
தாலிபான் ஆப்கானை கைப்பற்றிய பின் சில நாட்கள் தங்கள் நாட்டிலிருந்து படைகள் வெளியேற அனுமதி அளித்திருந்தது. அப்போது ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். தற்போது வரை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருவதால் பொதுமக்கள் ஒருவித பீதியுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு மக்களை வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கும் பணியினை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பலர் ஆப்கானை விட்டு வெளியேற முடிவு செய்து விண்ணப்பத்தோடு காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு திரண்டனர்.
இந்த அறிவிப்பு வெளிவந்த அன்றிலிருந்தே பலர் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பத்தில் 99 சதவீதம் மருத்துவ சிகிச்சைக்காக மற்ற நாடுகளுக்கு செல்வதாக குறிப்பிட்டு இருந்தனர்.
அதோடு, நோயாளிகள் சிலர் ஆம்புலன்ஸ் வேனுடன் பாஸ் போர்ட் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். இதில் 60 வயது முகமது உஸ்மான் என்பவரும் ஒருவர். இதுக்குறித்து கூறிய அவர் 'எனக்கு வயது 60, நான் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்போது மருத்துவர்கள் அவசரமாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறியதால் நான் பாகிஸ்தான் நாட்டுக்கு உடனடியாக செல்ல வேண்டும். அதற்காக விண்ணப்பம் கொடுக்க வந்துள்ளேன்' எனக் கூறினார்.
இதனால் ஆப்கான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தற்போது ஆப்கானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ப்ளீஸ், 'அவங்கள' தடுக்காதீங்க...! 'அப்படி' பண்ணக் கூடாதுன்னு 'எங்கையுமே' சொல்லல...! - தாலிபான்களிடம் 'வேண்டுகோள்' விடுத்த மலாலா...!
- 'பெண்களுக்கு மட்டும் இல்ல, இனிமேல் ஆண்களுக்கும் சோதனை தான்'... 'இது போல ஐடியாலாம் யாருடா கொடுக்குறா'... பீதியை கிளப்பியுள்ள தாலிபான்கள்!
- 'எங்க அட்டாக் ரொம்ப உக்கிரமா இருக்கும்'... 'தாலிபான்கள் போட்ட தண்டனை லிஸ்ட்'... 'நாங்க சும்மா விட மாட்டோம்'... கொந்தளித்த அமெரிக்கா!
- பாவம் தாலிபான்...! தயவு செஞ்சு 'அப்படி' மட்டும் பண்ணிடாதீங்க...! 'அவங்களுக்கு ஏற்கனவே ரொம்ப பிரஸர்...' - ஆதரவுக் குரலை 'ஜி-20' மாநாட்டில் பதிவு செய்த நாடு...!
- 'சரிப்பா, லிஸ்ட் சொல்றேன் எழுதிக்கோங்க'... 'தப்பு பண்றவங்களுக்கு என்னென்ன தண்டனை'... 'கேட்கும் போதே அலறுதே'... தாலிபான்கள் அதிரடி!
- 'சார், அந்த பார்சல் From அட்ரஸ் செக் பண்ணுங்க'... 'ஆப்கானிஸ்தான்னு போட்டு இருக்கு'... 'பதறிய அதிகாரிகள்'... சாக்குப்பைக்குள் காத்திருந்த மெகா சம்பவம்!
- '20 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா செதுக்கி கொண்டு வந்தாங்க'... 'போச்சா, ஒரே அறிவிப்புல எல்லாம் போச்சு'... 'இந்த பாவம் சும்மா விடுமா'?... பொங்கியெழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
- அதெல்லாம் 'நீங்க' சொல்லாதீங்க...! 'என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்...' 'எங்கள'லாம் கண்ட்ரோல் பண்ண 'உலகத்துலையே' ஆளு கிடையாது...! - சீறிய தாலிபான்கள்...!
- கஸ்டமருக்கு 'மருந்து' எடுத்து கொடுத்திட்டு இருந்தேன்...! 'அப்போ தாலிபான்கள் மெடிக்கல் ஷாப் உள்ள நுழைஞ்சு...' - துப்பாக்கி முனையில் 'இந்திய' வம்சாவளிக்கு நேர்ந்த கொடுமை...!
- புள்ள குட்டிங்க 'பசியால' துடிக்குது... 'பார்க்க வேதனையா இருக்கு, அதான்...' நாங்க வேற என்ன பண்றது...? - கண்ணீரோடு 'ஆப்கான்' மக்கள்...!