'வாயில் பாலை ஊற்றி'... 'இந்தா வந்துட்டாங்கல'... 'அடேய் சோதிக்காதிங்கடா' கடுப்பான நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புது வருடம் பிறந்த உடன் ஏதாவது ஒரு சேலஞ்ச் வந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு, ஐஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்,டென் இயர்ஸ் போட்டோ சேலஞ்ச், வீடியோ கால் சேலஞ்ச் என பல வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்சுகள் வைரலானது.

இந்நிலையில் இந்த வருடம் அந்த வரிசையில் இணைந்திருப்பது தான்  #cerealchallenge. டிக் டாக் செயலியில் வைரலாகி வரும் இந்த சேலஞ்ச்சில், காலை உணவாக வெளிநாடுகளில் பாலில் கலந்து சாப்பிடும் கான்பிளக்ஸை வைத்து இந்த சவாலை செய்கிறார்கள். அதாவது வாயில் பாலை ஊற்றி கான்பிளக்ஸை போட்ட பின்னர் மற்றொருவர் அதனை ஸ்பூனில் எடுத்து உண்ண வேண்டும். இது தான் #cerealchallenge.

இதனிடையே இந்த வினோத சவாலுக்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் இது ஆபத்தில் தான் சென்று முடியும் என தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த சவாலை எதிர்கொண்டு பலரும் அதன் வீடியோகளை பகிர்ந்து வருகிறார்கள்.

TWITTER, TIKTOK CHALLENGE, CEREALCHALLENGE.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்