'டிரம்ப் உயிரோடு அவரே விளையாடுறாரு'... 'அந்த மாத்திரையை சாப்பிடுறது நல்லதுக்கு இல்ல'... கிளம்பியிருக்கும் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உடல் பருமனைக் கொண்ட டிரம்ப், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் எனச்  சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு அரசின் உயரதிகாரிகள் எனப் பலருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் அதிபர் டிரம்ப்க்கும் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை முடிவில் அதிபர் டிரம்ப்க்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்த சூழ்நிலையில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள, தான் மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை எடுத்து வருவதாக டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கிடையே டிரம்பின் பரம வைரியாகக் கருதப்படும், சபாநாயகர் நான்சி பெலோசி கடுமையாக விமர்சித்தும், எச்சரித்தும் உள்ளார். ஏற்கனவே பருத்த உடலமைப்பைக் கொண்ட டொனால்டு டிரம்ப் தற்போது அந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் கவலை தெரிவித்துள்ளார். சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நமது ஜனாதிபதி, விஞ்ஞானிகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தைத் தற்காப்புக்காக அவர் எடுக்க வேண்டாம் என விரும்புகிறேன்.

அவரது வயதுடையவர்கள், அவரை போன்று உடல் பருமன் உடையவர்கள் அந்த மருந்தை எடுத்துக்கொள்வது நிச்சயமாக நல்ல யோசனையாக இருக்காது, எனக் கருதுவதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட மருத்துவக் குறிப்பில், ஜனாதிபதி டிரம்ப் உடல் பருமன் அதிகம் கொண்டவர் எனவும் ஆனால் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது. அந்த மருத்துவ அறிக்கையைச் சுட்டிக் காட்டியே சபாநாயகர் நான்சி பெலோசி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்