"183 மில்லியன் வருசத்துக்கு முன்னாடி.." ஆச்சரிய ஆய்வு.. விஞ்ஞானிகளை மிரள வெச்சுடுச்சு.."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பரந்து விரிந்து கிடக்கும் இந்த பூமிக்கு மத்தியில் நம்மில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் அல்லது கண்டுபிடிப்புகள் அவ்வப்போது கண்டெடுக்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

Advertising
>
Advertising

Also Read | சாலை ஓரம்.. வாலிபருக்கு நேர்ந்த துயரம்.. "சுத்தி இருந்தவங்க வேடிக்கை தான் பாத்துட்டு இருந்தாங்க.." உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்

அந்த வகையில், தற்போது சுமார் 183 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புள்ள ஒரு வினோதமான தொல்பொருள் தற்போது கிடைத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல், பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது.

இங்கிலாந்தின் கிங்ஸ் ஸ்டான்லி என்னும் கிராமத்தில் ஆடம் நைட் எபவருக்கு சொந்தமான நிலம் ஒன்று இருந்துள்ளது. அங்கே கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்த மாட்டு கொட்டகை ஒன்றின் அருகில், ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்ட போது, ஒரு புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுவும், "Pachycormus" எனப்படும் கடல் உயிரினமான மீன் ஒன்றின் புதை படிவம் தான் அது. புதை படிவம் (Fossils) என்பது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உயிருடன் வாழ்ந்து வந்த உயிரினம், பாறைப் படிவமாக மாறி உள்ளதை தான் அப்படி குறிப்பிடுவார்கள். அது போன்று ஒரு புதை படிவம் தான் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மீன் சுமார் 183 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் கண்கள் மற்றும் வாய் அகலமாக திறந்த நிலையில், இரை ஒன்றை தாக்க போகும் வகையில் இருந்துள்ளது. 183 மில்லியன் ஆண்டுகளான வினோதமான புதை படிவம் கண்டெடுக்கபட்டுள்ளது, இது தொடர்பான விஞ்ஞானிகளை கடும் ஆச்சர்யத்தில் உறைய செய்துள்ளது.

இதற்கு காரணம், பொதுவாக புதை படிவம் கண்டெடுக்கும் போது, கால போக்கில் அழுத்தத்தின் மூலம் தட்டையாகவே இருக்கும். ஆனால், தற்போது கிடைத்துள்ள மீனின் புதை படிவம் அப்படி இல்லாமல், வாய் திறந்த நிலையில் கூராக நின்றுள்ளது. மேலும், அதன் மண்டை ஓடு கூட நசுக்கப்படாமல் இருந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதை படிவம் கிடைத்த இடத்தின் உரிமையாளர் ஆடம் நைட் ஆய்வாளர்களுக்கு அனுமதி கொடுத்ததால், தொடர்ந்து சோதனை மேற்கொண்ட அவர்கள், இன்னும் சில தொல் பொருள்களை அங்கே கண்டு பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 183 மில்லியன் ஆண்டுகள் முன்புள்ள வினோதமான Fossil கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Also Read | அம்மாடியோவ்.. "அம்மா Retire ஆனதுக்கு இப்டி ஒரு சர்ப்ரைஸா?.." மகனின் பிரம்மாண்ட பிளான்.. "மொத்த ஊரே ஆடி போய்டுச்சு.."

FOSSIL, PECULIAR FOSSIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்