உலகத்திலேயே அதிக வயசு வாழ்ந்த நாய்க்கு நேர்ந்த சோகம்.. கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் அதிக வயது வாழ்ந்த நாயான பெப்பிள்ஸ், மரணமடைந்திருப்பதாக கின்னஸ் நிர்வாக அமைப்பு அறிவித்திருக்கிறது.
கின்னஸ் சாதனை
உலகிலேயே அதிக வயது வாழ்ந்த நாயாக கின்னஸ் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாய் பெப்பிள்ஸ். இதனை அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி கிரிகோரி தம்பதி வளர்த்து வந்தனர். இந்த நாய் கடந்த 3 ஆம் தேதி காலை 8.13 மணிக்கு உயிரிழந்ததாக கின்னஸ் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் வயது 22 ஆண்டுகள் 50 நாட்கள் ஆகும்.
பெப்பிள்ஸ் இன்னும் 5 மாதங்களில் தனது 23 வது பிறந்தநாளை கொண்டாட இருந்தது. இந்நிலையில் அதன் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 28 மார்ச் 2000 அன்று அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள லாங் ஐலேண்டில் பெப்பிள்ஸ் பிறந்தது. உலகின் வயதான நாயாக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு பெப்பிள்ஸ் உலக அளவில் பிரபலமானது.
சோகம்
பெப்பிள்ஸ்-க்கு முன்னர் உலகின் வயதான நாயாக டோபிகீத் என்னும் நாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அப்போது, தங்களது நாய் பெப்பிள்ஸ் குறித்து கின்னஸ் அமைப்பிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர் பாபி மற்றும் ஜூலி கிரிகோரி தம்பதியர். அதன்பிறகு உலகின் வயதான நாயாக பெப்பிள்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பெப்பிள்ஸ்-ன் இறப்பு குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளனர் பாபி மற்றும் ஜூலி கிரிகோரி தம்பதியினர்.
பெப்பிள்ஸ் உடன் ராக்கி எனும் நாயையும் இந்த தம்பதியர் வளர்த்து வந்திருக்கின்றனர். இதுவரையில் 32 குட்டிகளை பெப்பிள்ஸ் ஈன்றெடுத்திருக்கிறது. இசையை விரும்பி கேட்கும் பெப்பிள்ஸ் தங்களுடைய வாழ்வின் மிகச்சிறந்த தோழியாக இருந்ததாக இந்த தம்பதியினர் உருக்கத்துடன் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர். பெப்பிள்ஸ் தங்களுக்கு கிடைத்தது வரம் போன்றது என குறிப்பிட்டுள்ள அவர்கள் அது பற்றிய நினைவு தங்களது வாழ்நாள் முழுவதும் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். வயது மூப்பு காரணமாக பெப்பிள்ஸ் உயிரிழந்திருப்பது உலகெங்கிலும் உள்ள நாய் பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | ஊருக்கே செல்லப்பிராணியாக மாறிய ஒரு காகம்.. இதுக்கெல்லாம் காரணம் அந்த சம்பவம் தான்.. சோக பின்னணி..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உலகத்தின் மிக உயரமான பூனை.. கின்னஸ் நிர்வாகம் கொடுத்த அங்கீகாரம்.. இதுல இப்படியும் ஒரு சிக்கல் இருக்கா.. சோகத்தில் உரிமையாளர்..!
- இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா??.. உலகையே திரும்பி பார்க்க வைத்த பெண்.. 106 நாட்கள் தொடர்ந்து செய்த 'அசாத்திய' விஷயம்
- மொத்தமா 42 அடிக்கு 'நகம்'.. "பின்னாடி இருக்குற உருக்கமான சபதம்.." கின்னஸ் சாதனை படைச்சும் கண் கலங்கும் பெண்
- "கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க.." கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை & அமைச்சர் ரோஜா.. "இப்டி கூட சாதனை பண்ணலாமா??"
- "அம்மாடியோவ்.." கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம்.. "ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா??.." பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்
- வாழ்க்கையில முக்கால்வாசி நாள் வானத்துலயே கழிச்சிருக்காங்க.. உலகின் வயதான விமான பணிப்பெண்.. கின்னஸ் நிர்வாகம் கொடுத்த அங்கீகாரம்..!
- 'Avengers' ஃபேனா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா??.. தியேட்டர்'ல படம் பார்த்தே கின்னஸ் ரெக்கார்ட்.. Counts கேட்டதுக்கே தல சுத்துது..
- 6000 கிமீ தூரம்.. 110 நாள் ரன்னிங்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்.. யாருப்பா இந்த சுஃபியா கான்
- எப்படி 85 ஸ்பூனும் உடலோடு ஒட்டி இருக்கு? எந்த பசையும் இல்ல.. காந்த சக்தியும் இல்ல.. வியக்க வைக்கும் சாதனை மனிதன்
- '82 அடி' உயர கம்பத்தில்... 'ஒரு ஆள்' மட்டுமே உட்காரக் கூடிய பேரலில்... '78 நாட்கள்' தன்னந்தனியாக... மலைக்க வைக்கும் 'கின்னஸ் சாதனை'...