VIDEO : 'கப்பல்ல யாருக்கோ கொரோனாவாம்...' 'குதிச்சிடுறா கைப்புள்ள...' 'கரையை' அடைவதற்கு முன்னரே 'கடலில்' குதித்த 'பயணிகள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேஷியாவில் தீவு ஒன்றுக்கு பயணித்த கப்பலில் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, கப்பல் கரையை அடைவதற்கு முன்பாக பயணிகளில் பெரும்பாலானோர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு கடலில் குதித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் 209 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்துக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.

பொதுமக்கள் எந்த அளவுக்கு இந்த வைரசால் அச்சமடைந்துள்ளனர் என்பதற்கு இந்தோனேஷியாவில் நடந்த சம்பவம் உதாரணமாக உள்ளது.

இந்தோனேஷிய கப்பல் ஒன்று சுலாவேசி தீவுலிருந்து. இந்தோனேஷியாவின் போர்னோவுக்கும் சென்று கொண்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென கப்பலில் பயணித்த பயணிகளில் மூவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது எனத் தகவல் பரவியது. இதனால் மற்ற பயணிகள் அனைவரும் பீதி அடைந்தனர். இதனையடுத்து ஃபுளோரஸ் தீவின் மவுமியர் துறைமுகத்தில் அவசரமாக கப்பலை செலுத்த கேப்டன் உத்தரவிட்டார். அதனால் கப்பல் மவுமியர் துறைமுகம் நோக்கி விரைந்தது.

கொரோனா பாதிப்படைந்த பயணிகள் யார் எனத் தெரியாத நிலையில் இதர பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து, கப்பல் துறைமுகத்தை அடையும் முன்னரே உயிர் காக்கும் சூட்டை அணிந்து கடலில் குதிக்க ஆரம்பித்தனர்.

 

இதனையடுத்து கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் குதிக்கத் தொடங்க, கப்பல் ஊழியர்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. கப்பல் துறைமுகத்தை அடைந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட பயணிகள் மூவரும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சைக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்