“விமானம் நிக்கிற வரலாம் வெய்ட் பண்ண முடியாது”.. பின் சீட்டில் இருந்த பயணி திடீரென செஞ்ச அதிர்ச்சி காரியம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விமானம் தரையிறங்கிய போது பின் சீட்டில் இருந்த பயணி செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அதை மட்டும் சொல்லிட்டா.. என்னை வேலையை விட்டே தூக்கிடுவாங்க".. நெட்டிசன் கேட்ட கேள்வி.. ஆனந்த் மஹிந்திராவின் அல்ட்டிமேட் பதில்.. பின்னணி என்ன?

அமெரிக்காவின் சான் டைகோ நகரில் இருந்து சிகாகோ நகருக்குயு ‘யுனைட்டட் ஏர்லைன்ஸ்’ விமானம் நேற்று காலை வந்தது. சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், நிற்பதற்காக ஓடுபாதையில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வேகம் சற்று குறைய தொடங்கியதும், பயணிகள் இறங்குவதற்காக தங்களின் சீட் பெல்ட்டை கழற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக பயணி ஒருவர், விமானத்தின் அவசர கதவை திடீரென திறந்தார். இதனை அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிக்கொண்டிருந்த விமானத்தின் இறக்கையில் தனது பெட்டிகளுடன் சறுக்கியவாறே சென்று கீழே விழுந்தார். இதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விமானக் குழுவினர் இதுதொடர்பாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணையில், அவரது பெயர் ராண்டி ஃபிராங்க் (வயது 57) என்பது தெரியவந்தது. அவர் விமானத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் அனைவரும் இறங்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால், அவசர வழியை பயன்படுத்தியதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பயணி ஒருவர் திடீரென அவசரக் கதவை திறக்க முயன்றார். இதனைப் பார்த்த விமானப் பணிப்பெண், அவரது தலையில் டீ கோப்பையை கொண்டு தாக்கி அவரது செயலை தடுத்து நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

PASSENGER, OPENS PLANE, EMERGENCY EXIT, SLIDES DOWN WING, விமானம், பயணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்