கிளி பார்த்த வேலை.. உரிமையாளருக்கு ₹74 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்.. விநோத பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தைவான் நாட்டில் கிளி ஏற்படுத்திய விபத்தால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஒரு உயிர் வரபோற நேரத்துல".. கர்ப்பிணி பெண், கணவர் பயணித்த காரில்.. திடீரென நடந்த அசம்பாவிதம்!!

செல்ல பிராணிகளை வளர்க்கும் பழக்கம் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. குறிப்பாக பறவைகளை தங்களுடைய வீட்டில் ஒருவர் போல மக்கள் சிலர் கருதி வளர்த்தும் வருகின்றனர். ஆனால், அதுவே பிறருக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட சிக்கலை சந்திக்க வேண்டி வரும். அப்படித்தான் நடந்திருக்கிறது ஹுவாங் என்பவருக்கும்.

தைவான் நாட்டை சேர்ந்தவரான ஹுவாங் தன்னுடைய வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார்.  40 செ.மீ உயரம் கொண்ட இந்த கிளியின் இறக்கை மட்டும் 60 செ.மீ நீளம் கொண்டதாம். இந்நிலையில், ஹூவாங்கின் கிளி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒரு மருத்துவரின் அருகே உரசியபடி பறந்து சென்றதாகவும் இதனால் அச்சமடைந்த அந்த நபர் கீழே விழுந்ததில் அவருடைய இடுப்பில் எலும்புமுறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த காயம் காரணமாக தன்னால் பணிக்கு செல்ல முடியவில்லை எனவும் பொருளாதார ரீதியாக தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட நபர். அவருக்காக ஆஜர் ஆன வழக்கறிஞர் பாதிக்கப்பட்டவர் ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் எனவும் வழக்கமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்போது மணிக்கணக்கில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவரால் அதிகநேரம் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிக நேரம் நிற்கும்போது கால்கள் மரத்துப்போவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குறிப்பிட்டதாக தெரிகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து, நீதிமன்றம் ஹுவாங்கிற்கு 2 மாத சிறைத்தண்டனையும் 74 லட்சம் ரூபாய் (91,350 அமெரிக்க டாலர்) அபராதமும் விதித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும் அபராத தொகை அதிகமாக இருப்பதால் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஹுவாங் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

Also Read | "பந்தயத்துக்கு நாங்க வரலாமா?".. 20 நிமிசத்துல இத்தனை கிலோ பிரியாணியா? அசராமல் சாப்பிட்டு 5000 ரூபாய் சம்பாதித்த மனிதர்..!

PARROT, PARROT OWNER, FINED, COURT, BIRD, ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்