கோத்தபயவின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர்.. அடுத்து என்ன..?.. சூடுபிடிக்கும் இலங்கை அரசியல் களம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கோத்தபய ராஜபக்சே நேற்று தனது ராஜினாமா கடிதத்தை இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில், ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் தற்போது அறிவித்திருக்கிறார். இதனால் இலங்கை அரசியல் சூடு பிடித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பூட்டிக் கிடந்த வீடு.. "கதவ ஒடச்சிட்டு உள்ள போய் பாத்ததுல.." நடுங்கிய கிராமம்.. "உள்ள இதோட 'Smell' வேற வந்துருக்கு.."

போராட்டம்

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

ராஜினாமா

இதனிடையே பதவி விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய, திடீரென தனது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றார். இதனால் பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார். மேலும், நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாகவும், மேற்கு பிராந்தியங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் நேற்று அறிவித்திருந்தார் ரணில்.

இதனை தொடர்ந்து, சவூதி அரேபிய விமானம் மூலமாக நேற்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்த கோத்தபய தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று கோத்தபயவின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.

அடுத்தது என்ன?

கோத்தபய ராஜினாமா செய்திருக்கும் நிலையில்,அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறார்கள் இலங்கை போராட்டக்காரர்கள். இதனிடையே வரும் 20 ஆம் தேதி பாராளுமன்றம் கூட இருக்கிறது. அப்போது, அடுத்த அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், கோத்தபயவின் ஆட்சிக்காலம் வரை (2024) அவர் ஆட்சியில் இருப்பார் எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. பின்னர், புதிய அதிபர், பிரதமரை தேர்ந்தெடுத்தெடுப்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read | திருமண ரியாலிட்டி ஷோ பிரபலம்.. "தன் வருங்கால மனைவிக்கு செய்த பதைபதைப்பு காரியம்" - ஃப்ரீசர்ல இருந்தத பார்த்து அதிர்ந்த போலீஸ்

SRI LANKA, PARLIAMENT SPEAKER, PRESIDENT GOTABAYA, PRESIDENT GOTABAYA RESIGNATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்