'புலி பதுங்கி இருந்தது பாயுறதுக்கு டா'!.. மந்திரி சபை அறிவிப்பு வெளியானதும்... தாலிபான்களை நிலைகுலைய வைத்த அகமது மசூத்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

 ஆப்கானிஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ள தாலிபான்களின் இடைக்கால அரசுக்கு பஞ்ச்ஷீர் எதிர்ப்பு படை அகமது மசூத் வாயிலாக மிகப்பெரிய தலைவலி ஒன்று புதிதாக உருவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதி தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் தாலிபான்களை எதிர்த்து போராடி வந்தது.

இதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தாலிபான்கள் அறிவித்தனர். எனினும், தாலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதற்கிடையே இடைக்கால மந்திரிசபையையும், இடைக்கால பிரதமரையும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும், முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும், கொலை செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது என்றும், இது ஆப்கானிஸ்தான், பிராந்தியம் மற்றும் உலகின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் ஆப்கான் தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் மக்களை தாலிபான்களுக்கு எதிராக எழுச்சிபெறுவதற்கு அழைப்பு விடுத்த அவர், ஐக்கிய நாடுகள் சபை (UN), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC), ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஷாங்காயின் அமைப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SARC) மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு போன்ற உலகளாவிய நிறுவனங்களையும் (OIC) தாலிபான்களுடன் ஒத்துழைக்கக் கூடாது என்று அகமது மசூத் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்