"இதுபோன்ற ஒரு நெருக்கடியை சந்தித்து இல்லை..." 'உலகப் போருடன்' ஒப்பிட்ட 'ஐ.நா. பொதுச் செயலர்'... 'நாடுகள்' ஒன்றிணைய 'வேண்டுகோள்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் ஒரு சேர பீதியில் ஆழ்ந்துள்ளது. இதுவரை 42 ஆயிரம் பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். 8 லட்சம் பேர் வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்த நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த திணறி வருகின்றன.

இந்த நிலையில், 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான சுகாதார நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி குறிப்பிட்ட அவர், ஐக்கிய நாடுகள் அவையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இது போல ஒரு உலக சுகாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. சுகாதார நெருக்கடியை விட மிகவும் தீவிரமானது. இது ஒரு மனித நெருக்கடி எனக் குறிப்பட்டார்.

கொரோனா வைரஸ் ஒருபுறம் உலக மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இன்னொரு புறம்,மிகப்பெரிய அளவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும்  பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகிய சுகாதார திறனை அதிகரிக்க வேண்டும் எனவும் ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தினார்.

CORONA, WORLD WAR, PANDAMIC, U.N.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்