இந்திய ராணுவ வீரர் போல சீருடை.. செல்போனில் 900 ரகசிய ஆவணங்கள்.. யார் இவர்? விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ராஜஸ்தான்: இந்திய ராணுவ வீரர் போல சீருடை அணிந்து கொண்டு தகவல் சேகரித்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

செல்போன்ல பேசுற மாதிரி நடிச்சிட்டு இருந்திட்டு, திடீரென.. 63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்.. வரைபடம் வெளியிட்ட போலீசார்

இந்தியா - பாகிஸ்தான் இடையி‌லான மோதல் இரு நாடுகளும் சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டு முதலே தொடங்கிவிட்டது. பல சமஸ்தானங்கள் இணைந்தே இந்தியா என்ற நாடு உருவானது. சுதந்திரம் அடைந்த அன்றைய காலகட்டத்தில் காஷ்மீர் இந்தியா உடனோ பாகிஸ்தானுடனோ சேர முடியாது என காஷ்மீர் 1947-ல் கூறியது.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த நபர் கைது:

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தம் பகுதி பழங்குடியினரை தூண்டிவிட்டு காஷ்மீர் மீது போர் தொடுக்க வைத்தது. இதனால் அஞ்சிய காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் தமது ராஜ்ஜியத்தை இணைக்க சம்மதித்தார்.  இதையடுத்து காஷ்மீருக்கு ஆதரவாக களமிறங்கிய இந்திய படைகள் பாகிஸ்தானுடன் நேரடி மோதலை தொடங்கின. அன்று தொடங்கிய மோதல் இன்றுவரை முடிந்தப்பாடில்லை. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவ தகவல்களைப் பெற்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து உளவு வேலை:

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் சக்திபால் சக் என்ற பெயரில் இந்திய ராணுவ சீருடையை அணிந்து கொண்டு ராஜஸ்தானின் சிறிய டவுன் ஒன்றில் வலம் வந்துள்ளார். அப்போது எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராணுவ சீருடையில் சென்று நட்புகொண்டு  இந்திய ராணுவ தகவல்களைப் பெற்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து உளவு வேலை செய்துள்ளார்.

செல்போனில் இருந்த ராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள்:

இதுக்குறித்து அறிந்த ராஜஸ்தான் போலீசார் உடனடியாக அந்த நபரை பிடித்து கைது செய்துள்ளனர். விசாரணையில் அவரின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் ராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை கிடைத்துள்ளது. அதோடு, இதுவரை 900 ஆவணங்களை சக்திபால் சிங் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோட்டு சைடில் கிடந்த பை.. தூய்மை பணியாளர் எடுத்து உள்ளே பார்த்தபோது.. இத இங்க கொண்டு வந்து போட்டது யாரு?

PAKISTAN, INTELLIGENCE OFFICER, ISI, ARREST, GATHERING INFORMATION, இந்திய ராணுவ வீரர், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறை, ராஜஸ்தான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்