"இந்தியா Vs பாகிஸ்தான் மேட்ச விடுங்க, இத பாருங்க".. இந்திய குடும்பத்திற்கு பாகிஸ்தானில் கெடச்ச வரவேற்பு!!.. Trending!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, தங்களின் நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு முதல் முறையாக செல்லும் போது ஒரு வித தயக்கமும், நெருக்கடியும் கூட மனதில் உருவாகக் கூடும். அதிலும் இந்திய நாட்டில் இருந்து அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்லும் போது அந்த உணர்வு எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்.
Also Read | "டவுட்டே இல்ல, இவரு தான், ஆனா".. தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் விஷயத்தில் டிவில்லியர்ஸ் சொன்ன பதில்!!
கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது கூட உலக கிரிக்கெட் அரங்கில் அதிக கவனத்தை பெறும் விஷயமாகும்.
அப்படி ஒரு சூழலில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்கள் சிலருக்கு நேர்ந்த அனுபவம் தொடர்பான செய்தி, தற்போது இணையவாசிகள் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
மகளின் டென்னிஸ் போட்டிக்காக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதிக்கு இந்தியாவில் இருந்து ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர். தொடர்ந்து, பாகிஸ்தானில் அங்குள்ள நபர் ஒருவரிடம் லிப்ட் கேட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றது. அந்த இந்திய குடும்பத்தை வரவேற்ற பாகிஸ்தான் உள்ளூர்வாசி, தனது அலுவலகத்தில் வைத்து உணவருந்த வேண்டும் என்றும் அவர்களை வலியுறுத்தி உள்ளார்.
இதனையடுத்து, பாகிஸ்தானியர் மற்றும் இந்திய குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுவதை வேறொரு பாகிஸ்தானி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், இந்தியர்கள் தங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்கின்றனர். ஜாலியாக பல விஷயங்களை குறிப்பிட, டி20 உலக கோப்பை குறித்தும் அவர்கள் பேசுகின்றனர்.
அதில் பாகிஸ்தானியர், விராட் கோலியை எங்களுக்கு கொடுங்கள், கோப்பையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஜாலியாக கூறுகிறார். அதே போல, பாகிஸ்தானின் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த சிறுமி, இது போன்ற மனமார்ந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்றும் பாகிஸ்தான் மக்களின் விருந்தோம்பலை விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த குடும்பத்தினருக்கு பாகிஸ்தானி ஒருவர் சூப்பர் வரவேற்பு அளித்து ஹைதராபாத் பிரியாணியுடன் விருந்தும் கொடுத்தது தொடர்பான வீடியோக்கள் பலரையும் மனம் கவர்ந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த வீடியோவை அதிகம் வைரல் ஆக்கி பல கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்