சுத்தமா காசு இல்லங்க...! 'வேணும்னா எங்க கழுதைகள தர்றோம்...' - வாங்கிய கடனுக்கு வித்தியாசமாக 'டீல்' செய்யும் நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவலால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் தன் கடன் சுமையை அடைக்க கழுதைகளை பயன்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலால் வளர்ந்த நாடுகளே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் வளர்ந்து வரும் நாடுகள் திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தன் கடன் சுமையை அடைக்க கழுதைகளை பயன்படுத்தி வரும் செய்தி வெளியாகியுள்ளது.
சிறிய நாடான பாகிஸ்தான், இதுவரை சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடனும், ஐக்கிய அரபு அமீரகத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தானுக்கு, சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து ஆதரவாக இருக்கிறது.
உலக அளவில் பாகிஸ்தான் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சீனாவிடமும் வாங்கிய பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் கொடுத்தே பாகிஸ்தான் அரசு சமாளித்து வருகிறது.
பொதுவாக சீனாவில் கழுதைப்பால் மற்றும் கழுதைகளின் தோல் ஆகியவை மருந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே சீனாவிற்கு கழுதைகளுக்கான தேவை அதிகமாகி உள்ளது.
மேலும், கழுதைகளிலிருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகளையும் சீனா கழுதைகளிலிருந்தே தயாரிக்கிறது. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துகளும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
அதனால், சீனாவின் தேவையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டுகிறது.
இதனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கழுதைக்காகவே பாகிஸ்தானில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பாகிஸ்தானில் கழுதை பண்ணைகளை அதிகப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அணுகுமுறைக்கு பாகிஸ்தான் எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘5 பேங்க் பாஸ்புக், 2 லேப்டாப்’!.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீது இந்தியாவில் இருந்து சூதாட்டம்.. அதிரவைத்த சம்பவம்..!
- "தோனி மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தா... இப்போ நடக்குறதே வேற"!.. தோனி கேப்டன்சி ஃபார்முலா!.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் விளக்கம்!
- ‘எனக்கு பிடிச்ச பேட்ஸ்மேன் விராட் கோலி தான்’!.. பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் ‘மனைவி’ அசத்தல் பதில்..!
- "அப்படி பேசாதீங்க"... "ஆனா அந்த மாதிரி யாராவது சொல்லும்போது"... கோலி பற்றிய ரகசியம்!.. போட்டு உடைத்த பாபர் அசாம்!
- 'இனி அவர யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'!.. கோலி மீது எழும் 'அந்த' விமர்சனத்துக்கு... முன்னாள் பாகிஸ்தான் வீரர் பதிலடி!
- 'அந்த நாளுக்காக... பல வருஷமா தவம் இருக்கோம்!.. இப்படி பண்ணிட்டீங்களே'!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு!
- 'இதுக்கு பேரு கிரிக்கெட்டா?.. நீங்க எல்லாம் தயவு செஞ்சு இனிமே கிரிக்கெட் விளையாடாதீங்க'!.. கொந்தளித்த முன்னாள் வீரர்கள்!!
- 'மேட்ச் நேரத்துல எவ்வளவு திட்டி இருப்போம்'... 'இந்தியர்களுக்காக ஷோயப் அக்தர் விடுத்த வேண்டுகோள்'... நெகிழ வைத்த பாகிஸ்தான் நெட்டிசன்கள்!
- VIDEO: ‘கிரிக்கெட் வரலாற்றுல இப்படி நடந்து பார்த்ததே இல்ல’.. ‘இரண்டாக உடைந்த ஹெல்மெட்’.. மிரண்டுபோன வீரர்கள்..!
- 'நண்பா நாங்களும் உங்க ரத்த சொந்தம் தான்'... 'நாங்க இருக்கோம்'... 'ட்விட்டரில் வைரலாகும் ஹேஷ்டேக்'... நெகிழ வைத்த பாகிஸ்தான் நெட்டிசன்கள்!