‘சர்ச்சைக்குரிய கருத்து’... ‘பதிவிட்ட அதிபருக்கு’... ‘அதிர்ச்சியளித்த ட்விட்டர்’!
முகப்பு > செய்திகள் > உலகம்காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு ட்விட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தானின் திட்டம் தோல்வியைத் தழுவியது.
தற்போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் சூழலில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக அங்கு போராட்டம் நடைபெறுவதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறிய ட்விட்டர் நிறுவனம், ஆரிஃப் அல்விக்கு நோட்டீஸ் அனுப்பியது. ட்விட்டர் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்நாட்டின் மனித உரிமைகள் அமைச்சர் சிரீன் மஸாரி, இது தவறான எடுத்துக்காட்டு என விமர்சித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத், வெளியிட்ட ட்விட் பதிவு இந்திய சட்டங்களை மீறும் வகையில் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அண்மையில் ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்தாக பாகிஸ்தானை சேர்ந்த பலரின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘காலேஜ் பொண்ணுங்களா கடத்திட்டு வந்து’.. ‘கணவன், மனைவியின் வாக்குமூலத்தைக் கேட்டு’.. ‘உறைந்துபோன போலீஸார்’..
- ‘பேஸ்புக்கில் லைவ்’.. ‘உடனே வந்த ஒரு போன்கால்’.. ‘32 காஷ்மீர் பெண்களுக்கு உதவிய இன்ஜினீயர்’ குவியும் பாரட்டுக்கள்..!
- ‘இந்திய பெண்ணை மணமுடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்’.. வைரலாகும் போட்டோ..!
- 'எவ்வளவோ கெஞ்சினோம்.. ஆனா விடல'.. '6 கி.மீ நடந்தே போய்'.. கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!
- ‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’
- 'ரொம்ப சவாலான விஷயம்'...'ஆனா சூப்பரா பண்ணிட்டீங்க'...'பெண் அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு'!
- "ஹலோ, Modi ji ஆ? கடைய எப்போ sir தொறப்பீங்க??" Video of 'Kudi'magan's demand to Modi goes viral
- ‘போன் பேசவோ, பாக்கவோ விட மாட்றாங்க.. இதுக்கெல்லாம் இங்க இருக்குற மக்கள் பணிய மாட்டாங்க’!
- 'இனிமே'.. 'காஷ்மீர்ல இருக்குற ஒயிட் ஸ்கின்' பொண்ணுங்கள 'கல்யாணம் பண்லாம்'. . BJP MLA அதிரடி!
- ‘அதெல்லாம் நாங்க பாத்துப்போம்’.. ‘காஷ்மீர்’ பற்றி கருத்து தெரிவித்த அஃப்ரிடிக்கு.. ‘பதிலடி கொடுத்த பிரபல இந்திய வீரர்..’