பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மகன் திடீர் கைது.. காரை சோதனையிட்ட போது சிக்கிய பொருள்.. பரபரப்பு சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான்: காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வளர்ப்பு மகனை போலீசார் கைது செய்தனர். தற்போது இம்ரான் கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ள நிலையில் அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்று பாகிஸ்தானில் நடந்துள்ளது.

Advertising
>
Advertising

என் வாழ்க்கை சந்தோஷமா இல்லம்மா.. திருமணம் நடந்து ஒரு மாசம் கூட முடியல.. மகள் எடுத்த முடிவினால் உடைந்து நொறுங்கிய பெற்றோர்

இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா கைது :

பாகிஸ்தான்  பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி வகித்து வருகிறார். பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார்.  தற்போது இம்ரான் கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ள நிலையில், இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூஸா கைது செய்யப்பட்ட அதே நாளில் விடுதலை:

மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களது காரில் மது இருந்துள்ளது. மூஸா, பாகிஸ்தான் நாட்டு முதல் பெண்மணியான புஷ்ரா பீபியின் மகன். இம்ரான் கானை புஷ்ரா திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக தனது முன்னாள் கணவருடன் இணைந்து மூஸா பெற்றெடுத்தார்.  மூஸா கைது செய்யப்பட்ட அதே நாளில் விடுதலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு அதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மது விற்பனை மற்றும் நுகர்வு சட்டவிரோதமானது:

மது வைத்திருந்ததற்காக மேநேகா கைது செய்யப்பட்டபோது, பாகிஸ்தானின் முதல் பெண்மணியின் மகன் என்பதால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாதுகாப்பு அதிகாரிகளை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. lசிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் மது விற்பனை மற்றும் நுகர்வு சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சுடுகாடு வரைக்கும் வந்திட்டு போங்க.. இரவு 12 மணிக்கு நண்பர்கள் போட்ட பிளான்.. நம்பி போனவருக்கு நடந்த கொடூரம்

PAKISTAN, PM IMRAN KHAN, IMRAN KHAN SON, ARREST, LIQUOR POSSESSION, பாகிஸ்தான், பாகிஸ்தான் பிரதமர், இம்ரான்கான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்