தொழுகையின் போது கேட்ட பயங்கர சத்தம்... கொஞ்ச நேரத்துல... பதைபதைப்பில் பாகிஸ்தான்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் மாகாணத்தில், கிஸ்ஸா குவாரி பஜாரில் மசூதி ஒன்று அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

வழக்கம் போல வெள்ளிக்கிழமையான இன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், திடீரென அங்கு குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வெடிகுண்டு விபத்து

மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்டோர், படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், குண்டு வெடிப்பு பற்றி தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், மசூதிக்குள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு

குண்டு வெடிப்புக்கு முன்பாக, மசூதிக்குள் நுழைந்த இரண்டு பேர், துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அப்போது, வாயிலில் இருந்த இரண்டு போலீஸையும் துப்பாக்கியால் அந்த இரண்டு பேர் சுட்டுள்ளனர். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு போலீஸ், படுகாயத்துடன் சிகிட்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடும் கண்டனம்

மசூதியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிட்சை வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது பற்றி பெஷாவர் போலீசார் தரப்பில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மசூதியில் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததாகவும், அதன் பிறகு வெடிகுண்டு விபத்து நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதையும் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளித் தொழுகையின் போது, நடந்த வெடிகுண்டு விபத்து, அப்பகுதியில் கடும் அதிர்ச்சியினை உண்டு பண்ணியுள்ளது.

PAKISTAN, PESHAWAR, BOMB BLAST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்