"என்னோட பிளான் இதுதான்".. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் சொல்லிய பகீர் தகவல்.. பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பலரையும் அதிர வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "இவரைப் பத்தி ஒரே ஒரு தகவல்.. ₹5 கோடி கொடுக்க ரெடி".. ஆஸ்திரேலிய போலீசால் வலைவீசி தேடப்படும் இந்தியர்.. உறையவைக்கும் பின்னணி..!

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்தன. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருந்த நிலையில் கடந்த ஏப்ரலில் பதவி விலகினார் இம்ரான் கான்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளும் ஷெபாஸ் ஷெரீப் -ன் கட்சி சுமத்திவந்தது. இதன் காரணமாக இம்ரானின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ய அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனை எதிர்த்து, நாடுதழுவிய அளவில் போராட்டங்களை நடத்துமாறு கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தது இம்ரான் கானின் தெக்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி. இதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்துவதாக பிடிஐ கட்சி அறிவித்தது. இதில் பங்கேற்பதற்காக இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு நேற்று சென்றார்.

அப்போது அல்லாவாலா சவுக் எனும் இடத்தில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்ற நினைத்த இம்ரான் கான் அங்கிருந்த கண்டெய்னர் மீது ஏறி நின்றார். அப்போது கூட்டத்தில் இருந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் இம்ரான் கானின் வலதுகாலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சரிந்து விழ, உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இம்ரான் கானை துப்பாக்கியில் சுட்ட இளைஞர் தான் திட்டமிட்டே இவ்வாறு செய்ததாக தெரிவித்திருக்கிறார். தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளும் வீடியோவை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் முன்னாள் ஊடக ஆலோசகர் உமர் ஆர் குரைஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில் அந்த இளைஞர்,"அவர் (இம்ரான் கான்) மக்களை தவறாக வழிநடத்தியதால் நான் அதை செய்தேன். நான் இம்ரான் கானை மட்டும் கொல்ல நினைத்தேன். வேறு யாரையும் அல்ல. என் பைக்கில் தனியாகவே வந்தேன். அவர் லாகூரிலிருந்து கிளம்பியபோது நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். நான் தனியாகவே இயங்கினேன். இதில் வேறு யாருக்கும் சம்பந்தம் இல்லை" என்கிறார். இந்த வீடியோ உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Also Read | என்னிடம் வராதீர்கள் தம்பிகளே.. லீவு குறித்து தமிழ்நாடு வெதர்மேனிடம் கேட்கும் 2K கிட்ஸ்.. பாவம்யா மனுஷன்..!😅

PAKISTAN, MAN, CONFESS, SLAY, IMRAN KHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்